பெரியார் பாலிடெக்னிக் மாணவர்கள் கல்லூரிக்கு அளித்த பரிசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 12, 2023

பெரியார் பாலிடெக்னிக் மாணவர்கள் கல்லூரிக்கு அளித்த பரிசு

வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு இயந்திரவியல் துறை மாணவர்கள் திருச்சி எஸ்.ஆர்.எம்.பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில்நுட்பக் கண்காட்சியில் (Project Exhibition) கலந்து கொண்டு பரிசுகளை பெற்றனர். தாங்கள் பெற்ற பரிசுத் தொகையைக் கொண்டு மூன்று மின் விசிறிகளை வாங்கி அவற்றை பாலிடெக்னிக் கல்லூரிக்கு பரிசாக அளித்த மாணவர்களை இக்கல்லூரி முதல்வர் டாக்டர் இரா.மல்லிகா பாராட்டினார். இந்நிகழ்வில் துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment