திருச்சி, மே 2 தமிழ் நாட்டில் பாசன ஆறுகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் சேர்ந்துள்ள மண் குவியல்கள், புதர்கள் அகியவற்றை அப்புறப் படுத்தி நீர் தடையின்றி பாசனத்துக்கு செல்லும் வகையில் ஆண்டுதோறும் நீர்வளத்துறை சார்பில் தூர் வாரப்படுகின்றன. இதில் நடப்பாண்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகளை தூர்வார ரூ.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பணிகளை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தஞ்சையில் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் நடை பெற்று வருகிறது. தமிழ் நாடு நீர்வளத் துறை முதன் முறையாக தகவல் தொழில் நுட்ப வசதியைக் கொண்டு தூர்வாரும் பணியை அதி காரிகள் கண்காணிக்கும் வகையில்"தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு" என்ற புதிய செயலியை உருவாக்கி அறிமுகப் படுத்தியுள்ளது.
இந்த செயலி குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த செயலி யில் எந்தெந்த நீர்நிலை களில் தூர்வாரும் பணி எந்தனை கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெறு கிறது என்ற விவரம் இடம் பெற்றிருக்கும். தூர் வாரு வதற்கு முன்பாக அந்த இடத்தின் புகைப்படம், தூர் வாரிய பின்னர் அந்த இடத்தின் புகைப்படம் ஆகிய வற்றைநாள்தோறும் நீர்வளத்துறை அலுவலர் கள் மூலம் இந்த செயலி யில் பதிவேற்றம் செய்யப் படும். இந்த பணிகள் வெளிப் படைத் தன்மையுடன் நடைபெறுவதை செயலி மூலம் கண்காணிக்க நீர் வளத்துறை சார்பில் ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது நீர்வளத்துறை அலுவலர்கள், பொறியா ளர்கள் மட்டும் பயன் படுத்தும் வகையில் வடி வமைக்கப் பட்டுள்ளது.
இதை தொடர்ந்து விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக் களும் பயன்படுத்தும் வசதி விரைவில் ஏற்படுத்தப் படும். வருகிற ஜூன் மாதம் 12- ஆம் தேதிக்கு முன் தூர் வாரும் பணிகள் அனைத்தும் முடிக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment