தோப்புக்கரணம்- எண்ணிக்கிங்க! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 23, 2023

தோப்புக்கரணம்- எண்ணிக்கிங்க!

'துக்ளக்' 31.5.2023

ஏன் இப்படிக்கூடப் போடலாமே!

எதற்கெடுத்தாலும் மதவாதம் பேசியது தப்பு - தப்பு - முதல் தோப்புக் கரணம்?

ஒவ்வொரு குடிமகன் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்று ஏதோ உளறித் தொலைத்து விட்டேன் - அதற்காக இன்னொரு தோப்புக்கரணம்.

ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு என்று இன்னொரு பொய்யைச் சொன் னேன் - அதற்காக 3ஆவது தோப்புக் கரணம்.

கோமாதா, குலமாதா என்று சொல்லி பசுவைக் காப்பாற்றிட ஒடுக்கப்பட்ட மக்கள் கொலை செய்யப்படுவதற்குத் தூண்டுகோலாக இருந்து விட்டோம் - அதற்காக 4ஆவது தோப்புக்கரணம்.

இனிமேல் இந்தத் தவறுகளை செய்ய மாட்டோம் கருநாடகத்தில் எங்களைத் தண்டித்து விட்டீர்கள் - பாடம் கற்றுக் கொண்டோம்.

- இப்படிக்கு மோடி சங்பரிவார்க் குழுமம்


No comments:

Post a Comment