மூட்டு வலிக்கு முடக்கத்தான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 8, 2023

மூட்டு வலிக்கு முடக்கத்தான்!

நம் உடம்பில் கை, கால், மூட்டு, முதுகு வலி, முழங்கால் வலி என்று, எந்த வலியையும் சரி செய்யக் கூடிய சக்தி வாய்ந்தவை பிரண்டை, முடக்கத்தான் கீரை, இஞ்சி, பூண்டு மற்றும் மஞ்சள்.

பிரண்டை: துவையல் செய்து, அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.முடக்கத்தான் கீரை: மிளகு ரசம் வைத்து, மதிய உணவில் சேர்க்கலாம் அல்லது கீரை கூட்டு செய்யலாம். முடக்கத்தான் கீரையை தோசை மாவில் சேர்த்தும் தோசை சுடலாம்.

இஞ்சி: இதை தேநீராகவும், அன்றாட சமையலிலும் சேர்க்கலாம். பூண்டு: விழுதாக அரைத்து சமையலில் பயன்படுத்தலாம். மஞ்சள் தூள்: கால் டீஸ்பூன் தூளை வென்னீரில் கலந்து, தேநீராக தினமும் ஒரு டம்ளர் குடித் தால், இயற்கையான வலி நிவாரணியாக செயல்படும். 

No comments:

Post a Comment