செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 2, 2023

செய்திச் சுருக்கம்

உத்தரவு

ஊழல் புரியும் அரசு அதிகாரிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

விளக்கம்

தமிழ்நாடு மின் வழங்கல் விதிகளில் உத்தேசிக்கப் பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பொது மக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களில் வீடுகளுக்கு நிலைக் கட்டணம் மீதான அபராதம் விதிப்பது போன்ற தவறான தகவல்கள் சில ஊடகங் களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது என தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தகவல்.

அழைப்பு

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தாங்கள் விரும்பும் திட்டப் பணிகளை மேற்கொள்ள பொது மக்களுக்கு மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

அமைதி

தமிழ்நாட்டிலே திண்டுக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக பேட்டரி மூலம் சேமிக்கும் தொழில் நுட்பம் கொண்ட சூரியசக்தி மின் நிலையம் அமைக்க மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

கண்டறிய

மூளை மற்றும் முதுகுத் தண்டுவடப் பகுதியில் புற்று நோயை உண்டாக்கக்கூடிய கட்டிகளை கண்டறி யும் வகையில் ‘மெஷின் லேர்னிங்' சார்ந்த கணினி தொழில் நுட்பத்தை சென்னை அய்.அய்.டி. விஞ்ஞானிகள் குழு உருவாக்கியுள்ளது.

நடவடிக்கை

தொல்லை தரும் அலைபேசி அழைப்புகளை செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி கட்டுப்படுத்தும் டிராயின் உத்தரவை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நேற்று (1.5.2023) முதல் அமல்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

திட்டம்

முதல்கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தில் உள்ள 32 ரயில் நிலையங்களில் 2,560 கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.


No comments:

Post a Comment