கரூர், மே 23- கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் 5 முதல் 6 மெகா வாட் திறனில், தண்ணீரில் மிதக் கும் முதல் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, தமிழ்நாடு அரசின் செய்தித்தாள் காகித நிறுவனம் முடிவு செய்துள்ளது.
நீர் ஆவியாவதை தடுக்கவும், உள்ளூர் மக்களுக்கு வேலை கிடைக்கவும், நீர் நிலைகளில் மிதக்கும் சூரியசக்தி மின் நிலையம் அமைக்குமாறு, மாநில அரசுகளை, ஒன்றிய புதுப்பிக்கத்தக்க மின் துறை அறிவுறுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு அருகில், தண்ணீரில் 100 மெகா வாட்; ஈரோடு, பவானி சாகர் அணைக்கு அருகில், 100 மெகா வாட்; தேனி, வைகை அணைக்கு அருகில், 50 மெகா வாட் திறனில், 'புளோட்டிங் சோலார்' எனப்படும் தண்ணீரில் மிதக்கும் சூரியசக்தி மின் நிலை யங்கள் அமைக்க, மின் வாரியம், முடிவு செய்தது.
அத்திட்டத்தை, ஒன்றிய அர சின், 'சோலார் எனர்ஜி கார்ப்ப ரேஷன்' நிறுவனம் வாயிலாக செயல்படுத்த திட்டமிடப்பட்டது.
ம.பி., மாநிலத்தில் ஓம்காரேஷ் வர் அணைக்கு அருகில், 600 மெகா வாட் திறனில், தண்ணீரில் மிதக் கும் சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் அமைக்கப்படுகிறது.
மற்ற மாநிலங்களை விட, தமிழ் நாட்டில் ஆண்டுக்கு 300 நாட்க ளுக்கு மேல் சூரியசக்தி மின்சாரம் கிடைக்கும் சாதகமான வானிலை நிலவுகிறது.
தற்போது, தனியார் நிறுவனங் கள் நிலத்தில், அதிக திறனில் சூரியசக்தி மின் நிலையம்; கட்ட டங்களின் மேல் மேற்கூரை சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகின்றன.
கரூர் மாவட்டம், காகிதபுரத் தில், அரசின் செய்தித்தாள் காகித நிறுவனத்திற்கு, ஆண்டுக்கு 4 லட்சம் டன் காகிதஉற்பத்தித் திறன் உடைய ஆலை உள்ளது. அந்த ஆலை வளாகத்திற்குள், அய்ந்து நீர்த்தேக்கங்கள் உள்ளன.
அவற்றில் 5 மெகா வாட் முதல் 6 மெகா வாட் திறனில், தண்ணீரில் மிதக்கும் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்போது, அதற் கான ஆய்வுகள் நடந்து வருகின்றன.
அதன் அடிப்படையில் மின் நிலைய கட்டுமானப் பணிகள் விரைந்து துவக்கப்பட உள்ளன.
ஏரிகளை காப்பாற்ற இது உதுவும்!
ஒன்றிய புதுப்பிக்கத்தக்க மின் துறை அதிகாரி ஒருவர் கூறியதா வது: இந்தியாவிலேயே, தமிழ் நாட்டில் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. நிலத்தில் ஒரு மெகா வாட் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, முதலீட்டு செலவு 5 கோடி ரூபாய்.தண்ணீரில் மிதக்கும் சூரியசத்தி மின் நிலையத் திற்கு, அதனுடன் சேர்த்து கூடுத லாக 50 லட்சம் வரை செலவாகும். 'சோலர் பேனலில்' அதிக வெப்பம் இருக்கும்போது, அதன் திறன் குறையும். இது, தண்ணீரில் மிதக்கும் பேனல்களில் அவ்வாறு ஏற்படாது என்பதால், அதன் பயன்பாட்டு காலம் அதிகம்.சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங் களில் நிலத்தின் விலை மிகவும் அதிகம் உள்ளது. எனவே, அம் மாவட்டங்களில் நிலத்தில் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க இடம் கிடைக்காது.அதே சமயம், நான்கு மாவட்டங்களிலும் ஏரிகள் அதிகம் உள்ளன. அங்கு தேவைக்கு ஏற்ப 50 முதல் 100 மெகா வாட் வரை தண்ணீரில் மிதக்கும் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கலாம். இதற்கான பணிகளில் ஈடுபடுமாறு, மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. போதிய மின் வழித்தடங்கள் இருப்பதால், உள்ளூர் தேவையை பூர்த்தி செய்ய மின்சாரம் கிடைப்பதுடன், ஏரிக ளில் மணல் உள்ளிட்ட கனிம வள கொள்ளை நடப்பதையும் தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment