புதுடில்லி, மே 21 - மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலா ஜிக்கு எதிரான அரவக்குறிச்சி தேர்தல் வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித் துள்ளது.
2016ஆம் ஆண்டு தமிழ்நாடு சட் டப் பேரவைக்கு பொதுத் தேர்தல் நடந்தபோது, பணப் பட்டுவாடா காரணமாக, அரவக் குறிச்சி தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
பின், 2016 நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தற்போது திமுக அமைச்சராக உள்ள வி.செந்தில் பாலாஜி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற் றியை எதிர்த்து ஏ.பி.கீதா என்பவர் சென்னை உயர் நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அப்போது இந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண் டும் என்று வி.செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
உயர் நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இந்த உத்தர வுக்கு எதிராக 2018 மார்ச் 12ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தொடர்ந்தார்.
இதன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
அந்த வகையில் அந்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பை நேற்று பிறப்பித்துள்ளனர். அதில் செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கை ரத்து செய்வதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment