சென்னை, மே 7- தமிழ் நாட்டில் சென்னை மாநகராட்சி உட்பட 21 மாநகராட்சிகள், 138 நக ராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. அனைத்து மாநகராட் சிகள் மற்றும் நகராட்சிகளில் தரத் திற்கு ஏற்ப பணியாளர்கள் நியமனம் செய் யப்பட்டுள்ளனர்.
சில ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தவும் கோரிக்கை வருகிறது. இந்நிலையில், இரண்டாம் நிலை நக ராட்சி மன்றங்களை முதல் நிலை நகராட்சி மன்றங் களாக அமைச்சர் கே.என்.நேரு அறிவித் துள்ளார்.
இது குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு வெளியிட்டுள்ள அரசாணை:
திருப்பூர் மாவட்டம்-காங்கேயம், திருமுருகன் பூண்டி, ந £கப்பட்டினம் மாவட்டம் -வேதாரண் யம்,ராமநாதபுரம் மாவட்டம்-ராமேஸ் வரம்,அரியலூர் மாவட்டம்-ஜெயங் கொண்டம் ஆகிய இரண் டாம் நிலை நகராட்சி மன் றங்களை முதல் நிலை நகராட்சி மன்றங்க ளாகவும், கள்ளக்குறிச்சி மாவட்டம்-கள்ளக் குறிச்சி, திருப்பூர் மாவட் டம்-தாராபுரம், திருவாரூர் மாவட்டம்-திருவாரூர்,தேனி மாவட்டம்- போடி நாயக்கனூர்,தென்காசி மாவட்டம்-தென்காசி ஆகிய முதல்நிலை நக ராட்சி மன்றங்களை தேர்வுநிலை நகராட்சி மன்றங்களா கவும்,விழுப்புரம் மாவட் டம்-விழுப்புரம், மயிலாடு துறை மாவட்டம்-மயி லாடுதுறை, தேனி மாவட் டம்-தேனி-அல்லிநகரம் ஆகிய தேர்வுநிலை நக ராட்சி மன்றங்களை சிறப்பு நிலை நகராட்சி மன்றங்களாகவும், பெரம்பலூர் மாவட்டம்-பெரம்பலூர் இரண்டாம் நிலை நகராட்சி மன் றத்தினை தேர்வு நிலை நகராட்சி மன்றமாகவும் தரம் உயர்த்தப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment