‘நீட்' தேர்வு: மாணவர்கள் இருவர் பலி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 8, 2023

‘நீட்' தேர்வு: மாணவர்கள் இருவர் பலி!

புதுவை, மே 8 - தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்வ தற்காக அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. இந்த சூழலில் மாணவர்கள் தங்கள் மருத்துவ கனவு நிறைவே றாது என்ற முடிவினால் தற்கொலை செய்து கொள்கின்றனர். 

இதில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்ச்கள் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து வரு கின்றனர். இதனால் மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றும் வகையில், நீட் தேர்வுக்காக பயிற்சி பெற அரசும் தனியாக கோச்சிங் சென்டர் உருவாக்கியுள்ளது. எனவே மாணவர்கள் அதில் பயின்று வருகின்றனர். 

இந்த நிலையில், இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு 7.5.2023 அன்று நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த சூழலில் புதுச்சேரியை சேர்ந்த மாணவர் இந்த நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். புதுச்சேரி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மாணவன் ஹேமச் சந்திரன் (18). கடந்த ஆண்டு நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதன் காரணமாக, இந்த ஆண்டும் நீட் தேர்வை எழுத இருந்தார். அதற்காக தீவிர பயிற்சி பெற்று வந்த நிலையில், எங்கே இந்த முறையும் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயத்தில் தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இந்த சம்பவம் குறித்து பெற்றோர் காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்தவர்கள், மாணவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  


No comments:

Post a Comment