சிவகங்கை, மே 2 சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் பகுதியில் செயல்பட்டு வரும் ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் விடுதியில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம், அளவு, மேம்படுத்த வேண்டிய குடிநீர், கழிப்பிட வசதி மற்றும் விடுதியினை பராமரிக்கும் முறை, மாணவிகளின் வருகைப்பதிவு, தங்கி பயிலும் மாணவியர்களின் எண்ணிக்கை, மேம் படுத்த வேண்டிய வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர்கூறியதாவது:- மாணவிகள் தாங்கள் படிக்கும் காலத்திலேயே திட்டமிட்டு எதிர்கால லட்சியங்கள், நோக்கங்கள் குறித்து முழுமையாக அறிந்து செயல்பட வேண்டும். தங்களது குடும்ப சூழ்நிலையையும் பெற்றோர்களையும் மனதில் கொண்டு நல்லமுறையில் படிப்பதுடன், தனித்திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவிகள் தங்களது விளையாட்டுத்திறனை மேம்படுத்து வதற்கு, மாவட்ட விளையாட்டு துறையினருடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
மாணவிகள் வாசிப்புத்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பாஸ்கரன், தனி வட்டாட்சியர் உமா மகேஸ்வரி மற்றும் விடுதிக்காப்பாளர்கள், பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment