சென்னை, மே 8 - உள்ளாடைகளில் உள்ள உலோகத்தின் காரணமாக சோதனைக் கருவியில் ஓசை வந்த தால் அதை கழற்றி வைத்துவிட்டு தேர்வு எழுதக்கூறியதால் மன உளைச்சலுக்கு ஆளான சென்னை மாணவி தேர்வை சரியாக எழுத வில்லை என்று அழுதபடி கூறி யுள்ளார்
நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 95 ஆயிரத்து 824 மாணவிகள், 51 ஆயிரத்து 757 மாணவர்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 581 பேர் எழுதினார்கள். இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் தேர்வு மய்யத்தில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவியின் உள்ளாடையை கழற்றச் சொன்ன அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
உள்ளாடையில் இரும்பு கொக்கி இருந்த காரணத்தால் அதை கழற்ற தேர்வு கண்காணிப்பாளர் வலியுறுத்தி உள்ளார். அது உள்ளாடையில் உள்ள உலோகம் என்றும் இது பொதுவாக அனைத்து ஆடைகளிலும் இருக்கும் என்றும் மாணவி அழுதபடியே கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அவரது அழுகையை கண்டுகொள்ளாத கண்காணிப்பாளர் உள்ளா டையை கழற்றி வைத்துவிட்டு வந்தால் தேர்வு எழுதலாம் என்று கண்டிப்பாக கூறிவிட வெளியே வந்த அவர் அங்குள்ள கழிப்பறை யில் உள்ளாடையை கழற்றி வைத்துவிட்டு மிகுந்த மன உளைச் சலுடன் தேர்வு எழுதி உள்ளார். கடந்த ஆண்டு கேரளாவில் இதே போன்ற சம்பவம் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தநிலையில், தற்போது தமிழ்நாட்டின் தேர்வு மய்யத்திலேயே அத்தகைய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment