மூடநம்பிக்கை ஒழிப்பில் பகுத்தறிவாளர் ஒருவரின் பாராட்டுக்குரிய பங்களிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 17, 2023

மூடநம்பிக்கை ஒழிப்பில் பகுத்தறிவாளர் ஒருவரின் பாராட்டுக்குரிய பங்களிப்பு

வலங்கைமான், மே 17- வலங்கைமான் பகுதியில் கீழ அக்ரகாரம் பகுதியில் ருக்மணி மகால் மற்றும் தென்றல் திருமண மண்டபம் என்கிற பெயரில் திருமண மண்டபங்களை நடத்திவரும் பத்மநாபன் பகுத்தறிவாளர் கழகத் தோழர் ஆவார். 

மக்களின் அறியாமையை மூலதனமாக்கிக்கொண்டு ஆரிய ஆதிக்கவாதிகளால் பக்தி, மதம், கடவுளின் பெயரால் சனாதனம், வருணாசிரமம், ஜாதகம், நல்ல நாள், கெட்ட நாள், நல்ல நேரம், கெட்ட நேரம் என்றெல்லாம் பலவிதமாக மூடத்தனங்கள் பொது மக்களிடையே   திணிக்கப்பட்டுள்ள மூடநம்பிக்கைகளை களை வதற்கு தம்முடைய பங்களிப்பாக, வலங்கைமான் பத்மநாபன் தனக்கு உரிமையான திருமண மண்டபத்தில் சில சலுகைகளை அறிவித்துள்ளார். 

அதன்படி, மூடநம்பிக்கைகளால் கெட்ட நாளாக ஒதுக்கப் படுகின்ற நாள்களில் உதாரணமாக அஷ்டமி, நவமி, செவ்வாய்க் கிழமை, சனிக்கிழமை நாள்களிலும், இராகு கால நேரத்திலும் திருமணம் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்த முன்வருவோருக்கு மண்டப வாடகையில் சரிபாதி அளவு (50%) சலுகை அளிப்பதாக அறிவித்துள்ளார்.

மேலும், தாயில்லாத பெண்ணின் திருமணத்துக்கு மண்டப வாடகையில் 25 விழுக்காடு சலுகை அளிப்பதாகவும், தாய், தந்தை இருவருமே இல்லாத பெண்ணின் திருமணத்துக்கு மண்டப வாடகையில் சரிபாதி அளவு (50%) சலுகை அளிப்பதாக வும் அறிவித்துள்ளார். 

இதுபோன்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பகுத்தறிவு பரப்புரையிலும் பகுத்தறிவாளர்கழகம் மூலம் தொடர்ந்து செயலாற்றிவருகிறார் என்று பல்வேறு தரப் பினரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருவதாக பகுத்தறி வாளர் கழக மாநிலப் பொதுச்செயலாளர் வி.மோகன் தெரிவித்துள்ளார். தொழில் என்றாலும், அதிலும் பகுத்தறிவைப் பரப்பி மக்களை பண்படுத்தும் வலங்கைமான் பத்மநாபன் போன்றவர் களின் பணி அளப்பரியது. பாராட்டுக்குரியது.

No comments:

Post a Comment