புதுடில்லி, மே 26- ‘பா.ஜ., அல்லாத அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், புதுடில்லி நிர்வாகம் தொடர்பான ஒன்றிய அரசின் அவசர சட்டத்தை மாநிலங்களவையில் தோற் கடிக்க முடியும்,'' என, புதுடில்லி முத லமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுடில்லிக்கு மாநிலத் தகுதி இல்லாத தால், அதன் நிர்வாக அதிகாரம் முழுதும் துணைநிலை ஆளுநர் வசம் உள்ளது.
இதனால், புதுடில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதை தொடர்ந்து, தேசிய தலைநகர் குடிமைப்பணி ஆணையத்தை உரு வாக்கும் அவசர சட்டத்தை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சமீபத்தில் பிறப்பித்தார்.
இந்த அவசர சட்ட மசோதாவால் புதுடில்லியில் உள்ள அரசு அதிகாரி களின் பணி நியமனம், இட மாற்றம் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தும் அதி காரம் ஒன்றிய அரசு வசம் இருக்கும்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆம் ஆத்மி, எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகிறது.
மகாராட்டிரா மாநிலம் மும்பை சென்ற அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங் கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து பேசினார்.
இதன்பின், கெஜ்ரிவால் கூறியதாவது:
மாநிலங்களவையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. எனவே, மாநிலங்களவையில் புதுடில்லி நிர்வாகம் தொடர்பான அவசர சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தால், பா.ஜ., அல்லாத அனைத்து கட்சிகளும் அதற்கு எதிராக ஓட்டளித்து, அதை தோற்கடிக்க முடியும்.
எந்த மாநிலத்திலாவது பா.ஜ., அல் லாத வேறு கட்சிகளை மக்கள் ஆட்சியில் அமர்த்தினால், அந்த அரசை கவிழ்க்க பா.ஜ., மூன்று முயற்சிகளை மேற் கொள்கிறது.
முதலாவது, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது. அடுத்தது, சி.பி.அய்., அமலாக்கத் துறை போன்ற ஒன்றிய விசாரணை அமைப்புகளை ஏவி, எதிர்க்கட்சிகளை மிரட்டுவது. மூன்றாவது, அவசர சட்டம் இயற்றுவது. இந்த மூன்று நடை முறைகளைத் தான் பா.ஜ., பின்பற்றுகிறது.
எனவே, எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட்டால், பா.ஜ.,வை வீழ்த்த முடியும்.
புதுடில்லி நிர்வாகம் தொடர்பான அவசர சட்டத்தை மாநிலங்களவையில் தாக்கல் செய்யும்போது, அதற்கு எதிராக தேசியவாத காங்., உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் ஓட்டளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
- இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment