வேலியே பயிரை மேய்வதா? பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல்துறையினரே பெண்ணை கூட்டு பாலியல் வன்முறை செய்த அவலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 4, 2023

வேலியே பயிரை மேய்வதா? பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல்துறையினரே பெண்ணை கூட்டு பாலியல் வன்முறை செய்த அவலம்

லக்னோ,மே4- பாஜகவின் சாமி யார் ஆதித்யநாத் ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் கடந்த இரண்டு ஆண்டு களாக பாலியல் வன்முறைக்கு உள் ளாக்கப்பட்ட அவலம் அரங்கேறி யுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஷாமிலி என்ற பகுதியில் 23 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவ ருக்கு முகநூல் பக்கம் மூலமாக இம்ரான் மிஸ்ரா என்பவர் அறி முகமாகியிருக்கிறார். அவரும் ஷாம்லியில் காவல்துறை அதி காரியாக பணிபுரிந்து வருவதால், இந்த இளம்பெண் அவருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

இந்த சூழலில் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.  அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை நெருக் கமாக இருந்துள்ளார் காவல்துறை அதிகாரி இம்ரான் மிஸ்ரா.

இவ்வாறாக அந்த பெண் நெருக் கமாக இருக்கும்போது இரண்டு முறை கர்ப்பமாகியுள்ளார். ஆனால் இம்ரானோ, அதனை கலைக்க சொல்லி வற்புறுத்தியுள் ளார். இதனால் அந்த பெண்ணும் கலைத்துள்ளார்.   இப்படியே சில நாட்கள் தொடர, அந்த பெண்ணை இம்ரான் மிஸ்ரா தனியாக வீடு எடுத்து தங்க வைத்துள்ளார். அப்படி தங்கியிருக்கும்போதும் அடிக்கடி அவர் வந்து இவருடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

இந்த சூழலில் இம்ரானின் சகோதரரும் மற்றொரு காவல் துறை அதிகாரியுமான பர்கான் என்பவரும் இந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள் ளார். இது குறித்து இம்ரானிடம் கூறுகையில், அவர் இவரை மிரட்டியுள்ளார். 

மேலும் இதனை வெளியில் சொன்னால் கொலை செய்வதாக கூறியும் துன்புறுத்தியும் வந்துள் ளார். இப்படி இருவரும் மாறி மாறி சுமார் 2 ஆண்டுகளாக அந்த பெண்ணை பாலியல் வன் கொடுமை செய்து  வந்துள்ளனர்.

இந்த நிலையில் இதுகுறித்து தற்போது பாதிக்கப்பட்ட பெண், இம்ரான் மிஸ்ரா, பர்கான் ஆகிய இருவர்மீதும் புகார் அளித்துள்ளர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், அவர்கள் இருவரா லும் தான் மிகவும் கஷ்டப்பட்டேன் என்றும், தினமும் தன்னை அடித்து துன்புறுத்துவதோடு கொலை மிரட்டலும்   விடுத்ததால் 2 ஆண்டு களாக அவர்கள் மீது புகார் கொடுக்கவில்லை; ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரால் நான் மிகவும் தாக்கப்பட்டதால் தற்போது என்ன ஆனாலும் சரி என்று புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தற்போது தனது உயிருக்கு இம்ரான், பர்கான் ஆகிய 2 பேராலும் ஆபத்து உள்ளது என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். 

இதையடுத்து இதுகுறித்து வழக் குப்பதிவு செய்த அதிகாரிகள், முறை யாக நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளனர். காவல்துறையைச் சேர்ந்த இரு வரும்சேர்ந்து ஒரு இளம்பெண்ணை 2 ஆண்டுகளாக வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ள சம்பவம் உத் தரப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment