திண்டுக்கல், மே 15 அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, தமிழ்நாடு ஆளுநர்ஆர்.என்.ரவி நேற்று (14.5.2023) மாலை கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டார். இதற்காக அவர், சென்னை யில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். பின் னர் அங்கிருந்து கார் மூலம் அவர் கொடைக்கானலுக்கு மாலை 5.30 மணிக்கு வந்தடைந்தார்.
முன்னதாக கொடைக்கானலுக்கு சென்ற தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன் காட்டுவதற்காக வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திரண்டு வந்தனர். அப்போது, ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டபடி கருப்பு பலூனை கையில் பிடித்தபடி ஊர்வலமாக வந்தனர். அவர்களை நிலக்கோட்டை காவல்துறை துணைக் கண் காணிப்பாளர் முருகன், வத்தலக்குண்டு காவல் ஆய் வாளர் முருகன் மற்றும் காவலர்கள் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் தலைமையில் 40 பேர் கைது செய்யப்பட்டனர். வத்தலக்குண்டுவில் உள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்ட அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment