அரவிந்த கெஜ்ரிவாலுக்கு மம்தா ஆதரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 24, 2023

அரவிந்த கெஜ்ரிவாலுக்கு மம்தா ஆதரவு

புதுடில்லி, மே 24 மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக ஆதரவு திரட்டி வரும் அரவிந்த் கெஜ்ரிவால், மம்தாவை சந்தித்தார். அவரது போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிப்பதாக மம்தா உறுதி அளித்தார்.  டில்லியில் அதிகாரிகள் மாற்றம், நியமனம் போன்றவற்றில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக டில்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இதுபற்றிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தேர்ந்தெடுக்கப்பட்ட டில்லி அரசுக்கே அதிகாரம் இருப்ப தாக கடந்த வாரம் தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பு, டில்லி ஆம் ஆத்மி அரசுக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந் துள்ளது. அதே சமயத்தில், அத்தீர்ப்பை நீர்த்து போகச் செய்வதற்காக, அதி காரிகள் நியமனம் மற்றும் மாற்றத்தில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய தலைநகர் சிவில் சர்வீசஸ் ஆணையத்துக்கு அதிகாரம் அளிப்ப தற்கான அவசர சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது.

 இது, டில்லி அரசின் அதிகாரத்தை பறிக்கும் செயல் என்று கூறி, அவசர சட்டத்துக்கு ஆம் ஆத்மி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பா.ஜனதா அல் லாத முதலமைச்சர்களை சந்தித்து, டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வருகிறார்.

2 நாட்களுக்கு முன்பு, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு கேட் டார். இந்நிலையில், அவர் நேற்று (23.5.2023) கொல்கத்தா சென்றார். மேற்கு வங்காள மாநில முதலமைச் சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவ ருமான மம்தா   தலைமை செயலகத்தில் சந்தித்தார்.

அவசர சட்டத்துக்கு எதிரான தனது போராட்டத்துக்கு ஆதரவு கோரினார். 2024-ஆம் ஆண்டு நாடா ளுமன்ற தேர்தலில் கைகோர்ப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர். கெஜ்ரிவாலுடன், பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மானும் சென் றிருந்தார்.

 பின்னர், மம்தா  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டத் துக்கு முழு ஆதரவு அளிக்கிறோம். அவசர சட்டத்தை சட்டமாக்க நாடா ளுமன்ற இரு அவைகளிலும் மசோ தாவை நிறைவேற்ற வேண்டும். மாநிலங்களவையில் அந்த மசோதா மீதான ஓட்டெடுப்பு, நாடாளுமன்ற தேர்தலுக்கு அரை இறுதி பந்தயமாக அமையும். மசோதாவை ஆதரித்து ஓட்டுப்போட வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளை கேட்டுக்கொள் கிறேன் என்று அவர் கூறினார்.

 சரத்பவாரை சந்திக்கிறார் 

அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர் களிடம் கூறியதாவது:- சட்டமன்ற உறுப்பினர்களை பா.ஜனதா விலைக்கு வாங்குகிறது. எதிர்க்கட்சி அரசுகளை கவிழ்க்க சி.பி.அய்.யை பயன்படுத்து கிறது. பா.ஜனதா அல்லாத அரசுகளை துன்புறுத்த ஆளுநர்களை பயன் படுத்துகிறது என்று அவர் கூறினார். அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (புதன் கிழமை) மும்பைக்கு சென்று தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா (உத்தவ் பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.


No comments:

Post a Comment