தஞ்சை, மே 4- காவிரி டெல்டா பகுதிகளில் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஏலத்தை தடுத்து நிறுத்தி விவசாயிகளை காப்பாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மாபெரும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தஞ்சை மத்திய மாவட்ட, மாநகர தி.மு.க சார்பில் அனைத்து கட்சி பிரமுகர்கள் பங்கேற்ற மாபெரும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் 2.5.2023 மாலை 6 மணியளவில் தஞ்சாவூர் பழைய பேருந்துநிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு தஞ்சை மத்திய மாவட்ட செய லாளர், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன் தலைமையேற்று உரையாற்றினார்.
தமிழர் வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் பாபு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்காரவி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயினுலாவுதின், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் முத்து. உத்திராபதி, மாக்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சின்னை பாண் டியன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் வீ.தமிழ்செல்வன், தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் சி.அமர்சிங், காங்கிரஸ் கட்சி மாநகர மாவட்ட தலைவர் பி.ஜி.இராஜேந் திரன், கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு, விரைவாக செயல் பட்டு டெல்டா விவசாயிகளிக்கு வந்த பேராபத்தை தடுத்து நிறுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்து உரையாற்றினர்.
திமுக மாநில விவசாயணி செயலாளர் மதி வாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், தமிழ்நாடு அரசு கொறடா கோவி.செழியன், தஞ்சை நாடாளுமன்ற உறுப் பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தி.மு.க. பொருளாளர், நாடாளு மன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை விளக்கி சிறப்புரையாற்றினர்.
நிகழ்வின் தொடக்கத்தில் தஞ்சை மாநகராட்சி மேயர், திமுக தஞ்சை மாநகர செயலாளர் சண்.இராமநாதன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினர்.
இப்பொதுக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் கள், தஞ்சை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், தோழமை கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment