'விஜய பாரதம்' பதில் சொல்லுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 20, 2023

'விஜய பாரதம்' பதில் சொல்லுமா?

ஆர்.எஸ்.எஸ். வார இதழான விஜயபாரதம் (19.5.2023) தலையங்கத்தில் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது.

"கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயன், அமைச்சர்கள் உள்ளிட்ட எட்டுப் பேருடன் முதலீடுகளை வரவேற்க நடக்கும் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள அய்க்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபிக்கு மே 7 முதல் 11 வரை விஜயம் செய்ய முயற்சித்தார்.  அந்த நாட்டில் இருந்து யாரோ அழைத்தார்களாம். மத்திய அரசின் அயலுறவுத் துறை அதைத் தடுத்து விட்டது. 'முதலீட்டுக்கான கூட்டம் என்றால் அதிகாரிகள்தான் போக வேண்டும்' என்று மத்திய  அரசு சொல்லி விட்டது. வெளி நாட்டிலிருந்து  ஒரு மாநிலத்திற்கு நேரடி யாக அழைப்பு விடுப்பது முறையல்ல என்று  மத்திய அரசு தெரிவித்தது. முதலமைச்சர்  தன் பயணத்தை இப் போதைக்கு ரத்து செய்து விட்டார்."

இதுதான் விஜயபாரதத்தின் தலையங்கப் பகுதி கருத்து

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அதிகாரிகள்தான் போக வேண்டும். முதல் அமைச்சர் போகக் கூடாதாம்.

அப்படியா...! ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்க ஒப்பந்தத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்றாரே - அது எப்படியாம்? அது மட்டுமா? அதானிக்காக கடன் வழங்கிட ஸ்டேட் பாங்கு அதிகாரியையும் அதானியையும் உடன் அழைத்துச் சென்றாரே - 'விஜயபாரதம்' அகராதியில் இதற்குப்  பொருள் என்னவாம்?


No comments:

Post a Comment