குமரி, மே 12- தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் பெண்கள் , மற் றும் அனைத்துத் தொழி லாளர்களுக்கு குரல் கொடுக்கும் இயக்கம் திராவிடர்கழகம். தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். இந்த வகையில் திராவிடர்கழ கம் சார்பாக தொழிலா ளர்களின் உரிமைக்காக மே 20 அன்று தாம்பரத் தில் நடத்தப்படும் மாநாடு பரப்புரை மற்றும் குமரி மாவட்ட மக்கள் மத்தி யில் விழிப்புணர்வை ஏற் படுத்தும் வகையில் கன் னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார் பாக மாநாடு விளக்க பரப் புரை நிகழ்ச்சி நாகர்கோ வில் கோட்டாறு பகுதி யில் நடைபெற்றது.
கழக தொழிலாளரணி மாநாடு குறித்த துண்ட றிக்கைகளை பொதுமக்க ளிடம் வழங்கி பரப்புரை செய்து தொழிலாளர்க ளுக்காக உழைக்கும் கழக தலைவர் ஆசிரியர் கி. வீர மணி அவர்களுடைய மேலான செயல் பாடு களை எடுத்துரைத்தனர். குமரிமாவட்ட திரா விடர் கழக தோழர்கள் .
இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிர மணியம் தலைமை தாங் கினார். குமரி மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித் தார். மாவட்ட அமைப் பாளர் பிரான்சிஸ், முன் னிலை வகித்தார். தொழி லாள ரணி அமைப்பாளர் ச.ச. கருணாநிதி, மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஸ் , திமுக மேனாள் பொதுக்குழு உறுப்பினர் லூ.பெஞ்சமின் உட்பட பலரும் கலந்து கொண்டனர் .
தந்தை பெரியாரு டைய கருத்துக்கள், தமி ழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுடைய கருத்துக்கள் அடங்கிய துண்டறிக்கைகள் மற்றும் மாநாடு விளக்க துண்டறிக்கைகளை பொதுமக்கள் ஆர்வமு டன் வாங்கிப் படித்து தங்களுக்காக செயல்படும் திராவிடர் கழகத்திற்கு நன்றி தெரிவித்தனர். குமரி மாவட்டம் முழு மையாக இந்த துண்ட றிக்கைகள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment