கோவை, மே 2- மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு, பொது விடுமுறை விடப்பட்டது.
கோவை மாவட்டத்தில், தனியார் நிறுவனங்களில் விடுமுறை விடப்பட்டு உள்ளதா என்பதை கண்காணிக்க, கோவை தொழிலாளர் துறை அதி காரிகள் கோவை, பொள்ளாச்சி, வால் பாறை, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில், ஆய்வு மேற்கொண்டனர்.கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், ஓட்டல்கள், தனியார் தொழிற்சாலைகள் உள்பட, 101 நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், தொழிலாளர் நலத்துறை விதிகளை பின்பற்றாமல், தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியது கண்டுபிடிக்கப் பட்டது.
இது தொடர்பாக, அந்நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment