ஜம்மு, மே 14- ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலை நடத்த பாஜகவுக்கு இனி துணிவிருக்காது என்று மேனாள் காஷ்மீர் முதலமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் முக்கியத் தலைவருமான உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
கருநாடக சட்டப்பேரவையின் மொத்த முள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான் மைக்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைப்பதை நோக்கி முன்னேறி யுள்ளது.
இந்த நிலையில் 8 ஆண்டுகளாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படாத ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தேர்தலை நடத்த பாஜகவுக்கு கருநாடக தேர்தல் முடிவுகள் பயத்தை கொடுத்திருக்கும் என்று உமர் அப்துல்லா மறைமுகமாகக் கூறி இருக்கிறார்.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் மேனாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், “ ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தலை அனுமதிக்கும் தைரியம் இப்போது பாஜக வுக்கு இருக்காது” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலை நடத்த எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து தேர்தல் ஆணை யத்தை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment