வைக்கம் நூற்றாண்டு விழா கூட்டங்கள், பெரியாரியல் பயிற்சி முகாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 25, 2023

வைக்கம் நூற்றாண்டு விழா கூட்டங்கள், பெரியாரியல் பயிற்சி முகாம்

புதுக்கோட்டை மாவட்டக் கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்

புதுக்கோட்டை, மே 25- புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழக அலுவலகத் தில் கலந்துறவாடல் கூட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் மு.அறி வொளி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், துணைத் தலைவர் செ.ராசேந்திரன், அமைப்பா ளர் ஆ.சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ப.க.துணைத் தலை வர் அ.சரவணன் அனைவரையும் வர வேற்றார்.

மாநில மாணவர் கழகச் செயலாளர் இரா.செந்தூரப்பாண்டியன் கருத்துரை யாற்றினார்.

கடந்த மே 13ஆம் நாள் ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்குழுத் தீர்மானங் களை நிறைவேற்ற அனைவரும் இணைந்து செயல்படுவது, தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட் டத்தின் 100ஆம் ஆண்டு விழாவை மாவட்டம் முழுவதும் கொண்டாடுவது, வரும் ஜூலை 30ஆம் நாள் ஆதனக் கோட்டையில் நடைபெற உள்ள பெரியார் பயிற்சி முகாமில் அதிகமான இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவ மாணவியரை கலந்து கொள் ளச் செய்வது, அனைத்து கிளைக்கழகங் கள் உள்ள ஊர்களிலும் அமைப்பை வலுப்படுத்தி கொடியேற்றி சிறப்பாகச் செய்வது, புதுக்கோட்டை மாவட்டத் துடன் கந்தர்வகோட்டை ஒன்றியத்தை இணைத்து அறிவித்த கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறைந்த மேனாள் ப.க. தலைவர் பொன்.கருப்பையா படத்துக்கு மரி யாதை செலுத்தப்பட்டது. புதிய பொறுப்பாளர்களுக்கு பயனாடை அணிவிக்கப்பட்டது.

புதுக்கோட்டை ஒன்றியத் தலைவர் சாமி.இளங்கோ, நகரத் தலைவர் சு.கண்ணன், நகரச் செயலாளர் ரெ.மு. தருமராசு, மாவட்ட ப.க.தலைவர் செ.அ.தர்மசேகர், மாவட்ட இளைஞ ரணிச் செயலாளர் காரல்மார்க்ஸ், ம.மு. கண்ணன், மாரிமுத்து, மகளிரணியைச் சேர்ந்த வீர.வசந்தா, மாணவரணியைச் சேர்ந்த ச.மாரியம்மாள், ப.க.வைச் சேர்ந்த மலர் மன்னன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

புதிய பொறுப்பாளர்கள்

மாவட்ட இளைஞரணித் தலைவ ராக கா.காரல்மார்க்ஸ், செயலாளராக தி.பொன்மதி, பொன்னமராவதி ஒன் றிய அமைப்பாளராக க.ஆறுமுகம் ஆகி யோரும் அறிவிக்கப்பட்டனர்.


No comments:

Post a Comment