குழந்தைகள் அறிவுத் திறத்துடன் வளர ஊட்டச்சத்தை ஊக்குவிப்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 20, 2023

குழந்தைகள் அறிவுத் திறத்துடன் வளர ஊட்டச்சத்தை ஊக்குவிப்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, மே 20- தமிழ்நாட்டின் குழந்தைகள் அறிவார்ந்தவர்களாக -_ திடமானவர்களாக வளர அவர்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்வோம் என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:

கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற இரு மாதங்களில் சமூக நலத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாட்டை ஊட் டச்சத்து குறைபாடில்லாத மாநில மாக்குவதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள வலியுறுத்தி யிருந்தேன். தொடர்ந்து எடுக்கப் பட்ட புள்ளிவிவரம் எனக்கு மன வேதனை அளித்தது. தமிழ் நாட்டில் 6 வயதுக்குட்பட்ட குழந் தைகளில் பலர் ஊட்டச்சத்து குறைபாட்டால் வயதுக்கேற்ற எடை, உயரமில்லாமல் மெலிந்து இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து, தமிழ்நாட்டுக் குழந்தைகளை திடமானவர்களாக ஆக்கவேண்டும் என்ற உறுதியுடன் சிறப்பு ஊட்டச்சத்துத் திட்டத்தை திமுக அரசு பொறுப்பேற்று 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில் அறிவித்தேன். சில வாரங் களில், ஊட்டச்சத்துக் குறைபா டுடைய குழந்தைகளைக் கண்டறிய சிறப்பு மருத்துவ முகாமை நீலகிரி மாவட்டம் முத்தோரை குழந்தை கள் மய்யத்தில் தொடங்கி வைத் தேன்.

அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு பிப். 28ஆம் தேதி ஏற்றமிகு 7 திட்டங்களில் ஒன்றாக ஊட்டச் சத்தை உறுதிசெய் திட்டத்தின்கீழ், 6 வயதுக்குட்பட்ட கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய 1,11,216 குழந்தைகளுக்குச் சிறப்பு உணவாக ஆர்டியுஎப் உணவு அளிப்பதையும், 6 மாதத்துக் குட்பட்ட கடுமையான ஊட்டச் சத்துக் குறைபாடுடைய 11,917 குழந்தைகளுக்குத் தேவையான தாய்ப்பால் கிடைப்பதை உறுதி செய்ய தாய்மார்களுக்கு ஊட்டச் சத்துப் பெட்டகங்கள் வழங்கு வதையும் தொடங்கி வைத்தேன். 

இதன்படி ஊட்டச்சத்து உணவு, மருத்துவ உதவி வழங்கி இத்தகைய குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு வரு கிறது. இத்திட்டம் எந்த அளவுக்கு சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை எழுத்தாளர் சரவணன் சந்திரன் பதிவு செய் துள்ளார். இதற்குக் காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவிக் கிறேன். தமிழ்நாட்டின் குழந்தை கள் அறிவார்ந்தவர்களாக -_ திட மானவர்களாக வளர அவர்களின் ஊட்டச்சத்தை உறுதிசெய்திடு வோம். இவ்வாறு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment