தமிழர்கள் தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், யானைத் தந்தம், செம்பு, வெள்ளி, தங்கம், கல் முதலியவற்றில் பண்பாட்டையும், வரலாற்றையும் எழுதி தொன்மையான அறிவு மரபு களை பாதுகாத்து வந்துள்ளனர்.
ஓலையில் எழுதி வைக்கும் பழக்கமே பெரும்பாலும் இருந்துள் ளது. ஓலை யில் எழுதுவதற்கு எழுத்தாணியைப் பயன்படுத்தி உள்ளனர். தமிழர்கள் ஓலையில் எழுத இரும்பு, வெள்ளி, தங்கத் தாலான எழுத் தாணிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
ஓலைச்சுவடிகளை சேகரித்துப் பதிப்பித்து வரும் தமிழக அரசின் திருக்கோயில் ஓலைச் சுவடிகள் பாது காப்பு பராமரிப்பு நூலாக்கத் திட்டப் பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாள ரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தின் சுவடியியல் துறைப் பேராசிரியரு மான சு.தாமரைப் பாண்டியன் இந்த எழுத்தாணிகளைக் கண்டு பிடித்துள்ளார்.
மதுரையில் சிவக்குமார், திருநெல் வேலியில் ராமலிங்கம், கன்னியா குமரியில் கணேசன் ஆகியோரது வீடுகளில் ஓலைச் சுவடிகளைத் தேடும் போது இந்த அரிய எழுத்தாணிகள் கிடைத்துள்ளன.
இதுதொடர்பாக சு.தாமரைப் பாண்டியன் கூறியதாவது:
தமிழர்கள் ஓலையில் எழுதும் மரபு சங்க காலத்திலேயே இருந் துள்ளது. தமிழர்களின் தொன்மை அறிவு தொழில் நுட்பக் கருவி யான எழுத்தாணிகளையும் பாது காப்பது அவசியம். அகநானூறு, மணி மேகலை, சீவக சிந்தாமணி, பெருங் கதை, தமிழ்விடு தூது ஆகிய நூல் களில் ஓலையில் எழுதிய குறிப்புகள் காணப் படுகின்றன.
மந்திர ஓலை, சபையோலை, அறை யோலை இறையோலை, தூதோலை, பட்டோலை, ஆவண ஓலை, வெள்ளோலை, பொன் னோலை, படியோலை என்று அழைக் கப்பட்டன. ஓலை களைப் பாதுகாக் கும் இடம் ஆவணக் களரி என்றழைக் கப்பட்டது.
எழுத்தாணியால் ஓலையில் எழு துவது கடினமான செயல் என்பதை ‘ஏடு கிழியாதா, எழுத் தாணி ஒடியாதா / வாத்தியார் சாகானா வயிற்றெரிச்சல் தீராதா’ எனும் தனிப்பாடல் வரிகள் குறிக்கின்றன.
பொன்னாலான எழுத்தாணி இருந்ததை சீவக சிந்தாமணி மூலம் அறிய முடிகிறது.
பழந்தமிழர்கள் பயன்படுத்திய குண்டெழுத்தாணி, கூரெழுத் தாணி, வாரெழுத்தாணி, மடக் கெழுத்தாணி வகை கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஆனால், பெருங் கதையில் குறிப்பிடும் வெட் டெழுத்தாணி மட்டும் இதுவரை எங்குமே கிடைக்கவில்லை.
ஓலைச்சுவடிகளைத் திரட்டி நூலாக் குவதுபோல் மரபு தொழில் நுட்பக் கருவிகளான எழுத்தாணிகளைப் பாதுகாப் பதும் அவசியம் என்றார்.
எழுத்தாணி வகைகள்:
குண்டெழுத்தாணியை குழந்தைகள் எழுதிப் பழக பயன்படுத் துவர். இது அதிக நீளமின்றி எழுத்தாணியின் கொண் டைப் பகுதி கனமாகவும் குண் டாகவும், முனைப் பகுதியின் கூர்மை குறைவாகவும் காணப் படும். இதில் எழுதும் எழுத்துகள் பெரிதாக இருக்கும்.
கூரெழுத்தாணியை நன்கு கற்றுத் தேர்ந்த கல்வியாளர்கள் பயன்படுத்துவர். இதன் முனைப் பகுதி கூர்மையாக இருக்கும். எழுத்துகள் சிறியதாக இருக்கும். ஓலையின் ஒரு பத்தியில் 18 வரி கள்வரை எழுதலாம். வாரெழுத் தாணிய£னது சற்று நீளமாக இருக்கும்.
கொண்டைக்குப் பதில் சிறிய கத்தியும், கீழ்ப் பகுதியில் கூர்மை யாக இருக்கும். கத்தி, ஓலையை வாருவதால் வாரெழுத்தாணி என்றானது. மடக் கெழுத்தாணியானது, ஒருமுனையில் கத்தியும், மறு முனையில் கூராகவும் உள் ளதை ஒரு மரக் கைப்பிடிக்குள் மடக்கி வைப்பதால் மடக் கெழுத்தாணி என்றானது.
No comments:
Post a Comment