இந்திய வரலாறு தொடர்பாக நீக்கப்பட்ட பதிவுகளை மீண்டும் பாடப் புத்தகங்களில் சேர்க்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 22, 2023

இந்திய வரலாறு தொடர்பாக நீக்கப்பட்ட பதிவுகளை மீண்டும் பாடப் புத்தகங்களில் சேர்க்க வேண்டும்

நாத்திக கூட்டமைப்பின் தேசிய செயற்குழுவில் தீர்மானம்

கோழிக்கோடு,மே 22- இந்திய நாத்திக கூட்டமைப்பின் [திமிஸிகி]  தேசிய செயற்குழு கூட்டம் 14.05.2023 ஞாயிறு காலை 10.00 மணிக்கு கேரளா மாநிலம் கோழிக்கோடு நகரில் உள்ள நாலந்தா ஓட்டலில் நடை பெற்றது.

கூட்டத்திற்கு அமைப்பின் தலைவர் பேரா. முனைவர்.நரேந்திர நாயக் தலைமை ஏற்று நடத்தினார். கேரளா நாத்திக சமாஜம் பொறுப்பாளர் இரிங்கல் கிருஷ்ணன் வரவேற்று பேசினார். இந்திய செயலாளர்கள் தங்களது அறிக்கையை படித்தனர். தொடர்ந்து பொதுச்செயலாளர் தனது அறிக்கையை வழங்கினார். செயற்குழு  உறுப்பினர்கள் கலந்துகொண்டு அமைப்பின் செயல்பாடுகள் பற்றியும், அமைப்பை விரிவாக்குவது பற்றியும் கலந்துரையாடி னார்கள்.

அமைப்பை பதிவு செய்வது பற்றிய நடவடிக்கைகள் பற்றி பொதுச்செயலாளர் பேரா.முனைவர். சுடேஷ் கோடிராவ் எடுத்துரைத்தார்.

அமைப்பின் பொருளாளர் ஹர்சந்த் சிங் பிந்தர் வரவு- செலவு அறிக்கையை படித்தார். தொடர்ந்து நிருவாகக் குழு உறுப்பினர்கள் தங்களது கருத்தை வழங்கினார்கள்.

பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் திமிஸிகி  அமைப்பின்  தேசிய துணைத்தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், தேசிய செயலாளர் வி.மோகன் ஆகியோர் பங்கேற்று கருத் துகளை பதிவு செய்தனர்.

கூட்டத்தின் இறுதியில் கீழ்கண்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்

1:. என்.சி.இ.ஆர்.டி. மற்றும் சி.பி.எஸ்.சி. பாடப் புத்தகங்களில் இருந்த,பரிணாம வளர்ச்சி தொடர்பான சில அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட அவற்றை உடனடியாக மீண்டும் பாடப்புத்தகங்களில் சேர்க்க வேண்டும்.

2) இந்திய வரலாறு தொடர்பாக நீக்கப்பட்ட பதிவுகளை மீண்டும் பாடப் புத்தகங்களில்  சேர்க்கவேண்டும்.

3) எந்த மதத்தையும் பின்பற்றாதவர்கள், மதம் என்று குறிப்பிட வேண்டிய  இடங்களில்  'மனித நேயம்' என்னும் தனிப்பட்ட  வகையினர்   என்று எழுத வகை செய்யவேண்டும்..

4) பெரும்பான்மை அல்லது சிறுபான்மை மதங்களில் குறிப்பிடப்பட்ட சட்டங்களைத் தவிர்த்து இந்திய நாட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டம் அமல்படுத்தப்படவேண்டும்.

இறுதியில் அடுத்த கூட்டம் பற்றிய அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் என்று தலைவர் அறிவித்து நன்றி கூறி முடித்தார்.

No comments:

Post a Comment