பெருங்குடல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக் கையேடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 18, 2023

பெருங்குடல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக் கையேடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை, மே 18 தமிழ்நாடு அரசு  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உலக காஸ்ட்ராலஜி அமைப்பு, தமிழ்நாடு காஸ்ட்ரோ எண்ட்ராலஜிஸ்ட் அறக்கட்டளை மற்றும் அப்போலோ மருத்துவமனை சார்பில் பெருங்குடல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கையேட்டை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (17.5.2023) வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், அப்போலோமருத்துவமனையின் மருத்துவப்பணிகள் இயக்குநர் வெங்கடாசலம், இரைப்பை குடல் நிபுணர்மற்றும் துறைத் தலைவர் கே.ஆர்.பழனிசாமி, இரைப்பைகுடல் மருத்துவ ஆலோசகர்கள் பி.பிரம்மநாயகம், கார்த்திக் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment