பணி நிறைவு பெற்ற பெரியார் பாலிடெக்னிக் பேராசிரியைகள் நிறுவனத் தலைவர் டாக்டர் கி. வீரமணி பாராட்டினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 17, 2023

பணி நிறைவு பெற்ற பெரியார் பாலிடெக்னிக் பேராசிரியைகள் நிறுவனத் தலைவர் டாக்டர் கி. வீரமணி பாராட்டினார்

வல்லம், மே 17- பெரியார் நூற்றாண்டு பாலிடெக் னிக் கல்லூரியின் மாடர்ன் ஆபீஸ் துறையில் க.மலர்க்கொடி பேராசிரி யராக இணைந்து பின் னர் துறைத் தலைவராக உயர்ந்து தனது 36 ஆண்டு கால சிறப்பான பணியினை நிறைவு செய்த அவர் கடந்த 30.4.2023 அன்று பணி நிறைவு பெற்றார். 

திருமதி ம. தமிழ்ச் செல்வி கட்டட எழிற் கலை துறையில் 40 ஆண்டு காலம் பேராசிரி யையாக பணியாற்றி தனது பணியினை சிறப் பான முறையில் நிறைவு செய்த அவர் இப் பாலி டெக்னிக்கின் மேனாள் மாணவி என்பது குறிப் பிடத்தக்கது. 

தங்களது நீண்ட கால பணியினை சிறப்பாகவும், நேர்த்தியாகவும் நிறைவு செய்த பேராசிரியைகள் க.மலர்க்கொடி மற்றும் ம. தமிழ்ச்செல்வி அவர் களை நிறுவனத் தலைவர் டாக்டர் கி. வீரமணி பாராட்டினார். இந் நிகழ்வில் நிறுவனத் தலை வரின் துணைவியார் மோகனா வீரமணி, இப் பாலிடெக்னிக் முதல்வர் டாக்டர் இரா. மல்லிகா, துணைமுதல்வர் மற்றும் பேராசிரியர் க. மனோ கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேராசிரியை க. மலர்க் கொடி தனது பணிநிறை வையொட்டி, முனைவர் க. மனோகரன் & முனை வர் க. மலர்க்கொடி அறக் கட்டளை என்ற பெயரில் ரூபாய் 50,000 (ரூபாய் அய்ம்பதாயிரம்) பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி யின் மாடர்ன் ஆபீஸ் துறையின் பொருளாதா ரத்தில் பின்தங்கிய மாண வர்களின் கல்வி உதவித் தொகைக்கு நன்கொடை யாக வழங்கியுள்ளார்கள்.

மேலும் பேராசிரியை ம. தமிழ்ச்செல்வி தனது பணிநிறைவையொட்டி க.முத்துகிருட்டிணன் & மு. அமிர்தவள்ளி அறக் கட்டளை என்ற பெயரில் 20,000 ரூபாயை பெரியார் நூற்றாண்டு பாலிடெக் னிக் கல்லூரியின் கட்டட எழிற்கலைத் துறைக்கு ரூ.10,000, விடுதலை சந்தா ரூ.5,000 திருச்சி, அன்னை நாகம்மையார் குழந்தை கள் காப்பகத்திற்கு 

ரூ 2,500, மற்றும் திருச்சி, சாமி கைவல்யம் முதி யோர் இல்லத்திற்கு ரூபாய் 2,500 வீதம் நன் கொடை யாக வழங்கியுள் ளார்கள்.

No comments:

Post a Comment