புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு அரசியல் சட்டமா? அகந்தையா? ராகுல் காந்தி கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 25, 2023

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு அரசியல் சட்டமா? அகந்தையா? ராகுல் காந்தி கேள்வி

புதுடில்லி, மே 25  புதிய நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அழைத்து திறக்காதது இந்தியாவின் மிக உயர்ந்த அரசமைப்பு பதவியையே அவமதிக் கும் செயல் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார். 

தலைநகர் டில்லியில் பல நூறு கோடி செலவில், நவீன வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டு வந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் பணிகள் முழுமையாக நிறைவடைந்து இருக்கின்றன.

 இந்த நிலையில் வரும் மே 28 ஆம் தேதி இந்த புதிய நாடாளுமன்ற கட்டட வளாகத்தின் திறப்பு விழா நடைபெற உள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அனுப்பி இருக்கும் அழைப்பில், பிரதமர் நரேந்திர மோடி வரும் மே 28 ஆம் தேதி நாடாளுமன்ற புதிய வளாகத்தை திறந்து வைப்பார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அரசமைப்பின் உயரிய பொறுப்பில் இருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை வைத்து புதிய நாடாளு மன்ற வளாகத்தை திறக்க வேண்டும் என காங்கிரஸ் உள் ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.  

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை வைத்து திறக்கப் படதாத இந்த நாடாளுமன்ற புதிய வளாக திறப்பு விழாவை புறக்கணிப்ப தாக காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத் தைகள் உள்ளிட்ட 19 எதிர்க் கட்சிகள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளன. 

இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கூட் டாக ஒரு அறிக்கையும் வெளியிட்டு உள்ளனர். அதில் அவர்கள் தெரிவித்து இருப்பதாவது, "குடியரசுத் தலைவர் என்பவர் வெறும், இந்திய அரசின் தலைவர் மட்டுமல்ல. அவரும் நாடாளு மன்றத்தின் ஒரு அங்கமாக இருக்கிறார். அவர் நாடாளுமன்றத்துக்கு அழைக்கப் படுகிறார். முன்னுரை மற்றும் உரை யாற்றுகிறார். எனவே குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முதான், இந்த புதிய நாடாளுமன்ற கட்டட வளா கத்தை திறந்து வைக்க வேண்டும் என அவர்கள் வாதிட்டு வருகிறார்கள். 

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலை வர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள் ளிட்டோர் கடந்த சில நாட்களாகவே பேசி வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து தற்போது பேசியுள்ள ராகுல் காந்தி,

"நாடாளுமன்றம் என்பது அரச மைப்பின் மாண்புகளை கொண்டு கட் டப்பட்ட ஒன்றாகும். வெறும் ஈகோ நிரம்பிய செங்கற்களை கொண்டு அது கட்டப்பட்டது கிடையாது. நாடா ளுமன்ற புதிய வளாகத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அழைக்காது நாட்டின் உயரிய அரசியல் அமைப்பு பதவியை அவமதிக்கும் செயல்." என்று விமர் சித்து உள்ளார்.

No comments:

Post a Comment