அடுத்த பெரும் தொற்று அபாயம் உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 25, 2023

அடுத்த பெரும் தொற்று அபாயம் உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை

ஜெனிவா மே 25  கோவிட் தொற்றுநோயைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தான தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ள தாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. 

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்ற உலக சுகாதார நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் அதன் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் ஆற்றிய உரை: 

"கோவிட் தொற்றுநோயை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளது. அது பரவாமல் தடுப்பதற்கான பேச்சுவார்த் தைக்கு உலக நாடுகள் முன் னுரிமை கொடுக்க வேண்டும். கோவிட் பெருந்தொற்றால் உலகம் முழுவதும் 2 கோடி பேர் உயிரிழந்துள்ளனர். கோவிட் பெருந்தொற்று இனி உலகிற்கு அச்சுறுத்தலாக இருக்காது என உலக சுகா தார நிறுவனம் அறிவித் துள்ளது. எனினும், அந்த பெருந்தொற்று மறைந்து விடவில்லை. தொலைவில் இருக்கிறது. 

புதிய பெருந்தொற்று 

கோவிட் பெருந்தொற்றை விட அதிக உடல் பாதிப்பு களையும், உயிர்ச் சேதங் களையும் ஏற்படுத்தும் என்ப தால், அதனை எதிர்கொள்ள உலகம் தயாராக வேண்டும். கோவிட் தொற்று நோய் வந்தபோது அதனை எதிர் கொள்ள உலகம் தயாராக இல்லை. அதன் காரணமாக அது மிகப் பெரிய சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியது. புதிய தொற்றுநோயும் வீழ்த் தக் கூடியதாக இருக்காது. அது நமது கதவை தட்டப் போகிறது. நாம் செய்ய வேண் டியவற்றைச் செய்யாவிட் டால் அது நடக்கும். இப் போதே நாம் செய்யாவிட் டால், பிறகு எப்போது?" என்று உலக சுகாதார நிறுவ னத்தின் தலைவர் டெட் ரோஸ் அதானம் கேப்ரியே சஸ் தெரிவித்துள்ளார்


No comments:

Post a Comment