சென்னை, மே 3- நடிகரும் பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷின் வங்கிக் கணக்குகளை முடக்கி பொருளாதார குற்றப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 விழுக்காடு வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தது. இதை நம்பி லட்சக்கணக்கானோர் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். இதனிடையே, அந்நிறுவனத்தின் இயக்குநரும் பாஜக நிர்வாகியுமான ஹரீஷ், மற்றொரு இயக்குநரான மாலதி ஆகியோரை பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், நடிக ரும், பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே. சுரேஷுக்கு தொடர்பிருப்பது அம்பலமாகியுள்ளது. ஆர்.கே.சுரேஷ் குறித்து அனைத்து விமான நிலையங் களுக்கும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்நிலையில், நடிகர் ஆர்.கே.சுரேஷின் வங்கிக் கணக்கு முடக்கப் பட்டுள்ளது. சந்தேகம்படும்படியான பணப்பரிவர்த்தனை இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் முடக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவ ரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. ஆர்.கே. சுரேஷை விசாரணைக்கு அழைத்தும் ஆஜராகாததால் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். முறைகேடான பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதா என்பது குறித்து குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment