பெண் குழந்தைகள் பாதுகாப்பு முதிர்வுத் தொகை: சமூகநலத் துறையை அணுகலாம் - அமைச்சர் பெ.கீதாஜீவன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 11, 2023

பெண் குழந்தைகள் பாதுகாப்பு முதிர்வுத் தொகை: சமூகநலத் துறையை அணுகலாம் - அமைச்சர் பெ.கீதாஜீவன் தகவல்

தூத்துக்குடி, மே 11 - தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட முதிர்வு தொகைபெற சமூக நலத்துறையை அணுகலாம் என்று சமூக நலன்-மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ. கீதாஜீவன் தெரிவித்தார்.

தூத்துக்குடிவருவாய் வட் டாட்சியர் அலுவலகம் சார்பில், தூத்துக்குடி சட்டமன்ற அலுவல கத்தில் மாற்றுத் திறனாளிகளுக் கான மாதாந்திர உதவித் தொகைக் கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார்.

அமைச்சர் பெ.கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராகப் பங் கேற்று, 50 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ. 1,500 பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.

பின்னர், அவர் செய்தியாளர் களிடம் பேசியதாவது, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத் தின் கீழ் 2 பெண் குழந்தைகள் உள்ளோர். அவர்களது 18 வயது பூர்த்திஅடைந்து, முதிர்வு தொகை பெறக்கூடியவர்கள், தங்களிட முள்ள பாண்டு பேப்பரின் நகலை சமூகநலத் துறை அலுவலகத்தில் நேரில் சென்று கொடுத்து, முதிர்வுத் தொகையைப் பெறலாம். இந்தத் திட்டத்தில் இது வரை ரூ- 231 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவர் பாலகுருசாமி, வட்டாட் சியர்கள் பிரபாசுரன், ராஜ லெட்சுமி உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

No comments:

Post a Comment