கடவுள் சக்தி எங்கே? மதுரை அருகே கோவில் கோபுர கலசங்கள் திருட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 13, 2023

கடவுள் சக்தி எங்கே? மதுரை அருகே கோவில் கோபுர கலசங்கள் திருட்டு

சோழவந்தான், மே 13- சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் பூவலிங்கஅய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புதிதாக விநாயகர் சன்னதி, சால கோபுரம் கட்டப்பட்டு இருந்தது. இதில் விநாயகர் சன்னதியில் ஒரு கலசமும், சால கோபுரத்தில் 3 கல சமும் நிறுவப்பட்டது. 

இந்த நிலையில் சம்பவத்தன்று பூசாரி பிச்சைக்கண்ணு பூஜை செய்ய வந்த போது விநாயகர் சன்னதியில் உள்ள ஒரு கலசமும், சாலக்கோபுரத்தில் உள்ள ஒரு கலசமும் திருடு போய் இருந் ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

இது பற்றி அவர் கிராம தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட கிராமமுக்கி யஸ்தரிடம் புகார் தெரிவித்தார். இது குறித்து காடுபட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் காவல் துறையினர் நிகழ்வு இடத்திற்கு சென்று ஆய்வு செய்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment