சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றியவர்கள் 'முதலமைச்சர் மாநில இளைஞர் விருது'க்கு விண்ணப்பிக்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 3, 2023

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றியவர்கள் 'முதலமைச்சர் மாநில இளைஞர் விருது'க்கு விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை,மே3 - சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றி யவர்கள் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளை ஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில் 2015ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 15 முதல் 35 வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப் படுகிறது. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கிய தாகும்.

அதன்படி 2023ஆம் ஆண்டிற் கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வருகிற ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதியன்று நடை பெறும் சுதந்திர நாள் விழாவில் வழங்கப்பட உள்ளது. 

இவ்விருதுக்கு 15 வயது முதல் 35 வரை உள்ள ஆண்-பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

 கடந்த நிதியாண்டில் அதாவது 

1.-4.-2022 முதல் 31.-3.-2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். 

விண்ணப்பதாரர்கள் சமுதாய நல னுக்காக தன்னார்வத்துடன் தொண் டாற்றியிருக்க வேண்டும். விண்ணப்ப தாரருக்கு உள்ளுர் மக்களிடம் உள்ள செல்வாக்கு, விருதிற்கான பரிசீ லனை கணக்கில் கொள்ளப்படும்.

இணையதளம் முலம் விண்ணப்பிக்க வருகிற 31ஆம் தேதியன்று மாலை 4 மணி கடைசி யாகும்.

விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான <www.sdat.tn.gov.in-™> பதிவி றக்கம் செய்யலாம். 

விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே சமர்ப்பித்தல் வேண்டும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவ லகரை அலுவலக வேலை நாட் களில் 04175-233169 என்ற தொலை பேசி எண் ணில் தொடர்பு கொள்ளலாம் என திருவண் ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment