ஈரோட்டில் மாபெரும் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 14, 2023

ஈரோட்டில் மாபெரும் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற  ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களுக்கு பாராட்டு விழாவும், திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக் கப் பொதுக்கூட்டமும் ஈரோடு, சூரம்பட்டி நால்ரோட்டில் 13.5.2023 அன்று மாலை நடைபெற்றது.

கூட்டத்தின் தொடக்கத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பை முன்னிறுத்தி, பகுத்தறிவை பரப்பும் வகையில் திண்டுக் கல் ஈட்டி. கணேசன் அவர்களால், மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ஈரோடு கழக மாவட்டச் செயலாளர் மா. மணிமாறன் அவர்கள் வரவேற்புரை ஆற்ற, மாவட்டத் தலைவர் இரா.நற்குணன் அவர்களின் தலைமையில் பொதுக் கூட்டம் தொடங்கியது.

திராவிடர் கழகத் தீர்மானங்கள்தான் பின்நாளில் சட்டங்கள்:

கூட்டத்தில் உரையாற்றிய கழகப் பேச்சாளர் தஞ்சை. பெரியார் செல்வம் சாமியார்களின் அட்டூழி யங்களையும், இந்த மண்ணில் தந்தை பெரியாரால் பரப் பப்பட்ட பகுத்தறிவு கொள்கைகளையும் விளக்கி, திரா விடர் கழக தீர்மானங்கள்தான் பின்நாளில் இந்தியாவின் சட்டங்களாக இயற்றப்பட்டது என்பதை குறிப்புகளுடன் விவரித்தார். கருநாடகத் தேர்தலில் காங்கிரசின் வெற்றி என்பது பாசிச பிஜேபிக்கு மரண அடியாக இருக்கும், 2024 ஆம் ஆண்டு தேர்தலில் இது பிரதிபலிக்கும் என்பதைக் கூறி, ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு , சமூக நீதிக்காக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் உழைப்பினைப் பற்றி உரையாற்றினார்.

பிஜேபி அரசு இந்தியாவில் இருந்தே அகற்றப்பட வேண்டும்:

கழகப் பொருளாளர் வீ.குமரேசன் தனது உரையில்:

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் பரப்புரை பயணம் அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள மாநில உரிமைகளை பற்றி அனைவரிடத் திலும் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது என் றும், அதன் தாக்கம் கர்நாடக தேர்தலிலும் பிரதிபலித்திருக் கிறது என்றார். மாநில அரசின் உரிமைகளை தடுத்து வரும் பிஜேபி, கர்நாடகத்தில் எப்படிப்பட்ட தோல்வியை சந்தித்து உள்ளது என்பதையும் விவரித்தார். தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆளுநரால் ஏற்படும் இடைஞ்சல்கள், அவரின் ஆங்கில பத்திரிக்கைக்கான நேர்காணல் அனைத்தும் சனாதனத்தை பாதுகாக்கக்கூடிய பாசிசத் தின் வடிவமாக இருக்கிறது என்றும், இது அனைத்தும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றால் சனாதன, பாசிச, ஒன்றிய பிஜேபி அரசு மொத்தமாக இந்தியாவில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்றார்.

BJP FREE ZONE:

கழகத்தின் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர்  அ.அருள்மொழி தனது உரையில்; திராவிடர் கழக தீர்மானங்கள் ஆரம்பத்தில் மக்களுக்கு தெரியாது. திராவிடர் கழக தீர்மானங்கள் எப்போது மக்களுக்கு தெரியவரும் என்றால், அது ஒரு நாள் சட்டமாக வரும் அப்போதுதான் அன்றைக்கு இது திராவிடர் கழக தீர் மானமாக வந்தது என்பது அனைவருக்கும் தெரியவரும் என்றார்.  அப்படி 1929 இல் செங்கல்பட்டு மாநாட்டில் தந்தை பெரியாரால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எந்தெந்த வகையிலெல்லாம் பெண்ணுரிமை சட்டங் களாக வந்தது என்பதை விவரித்தார். ஈ.வெ.கி.ச இளங் கோவன் அவர்களின் தாத்தா ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்களும் ஈ.வெ.கி.சம்பத் அவர்களும் எப்படிப்பட்ட கொள்கையாளர்கள் என்பதை விளக்கி, அந்த குடும்பத்தில் வந்த இவரின் வெற்றி நமக்கு மகிழ்ச்சியை தருகிறது என்றார். கேட் ஆஃப் இந்தியா (Gate of India)    தந்தை பெரியார் தான் என்றும், பெரியாரின் கொள்கை எல்லா நிலையிலும் தமிழ்நாட்டை காத்து நிற்கிறது என்பதை விளக்கிப் பேசினார். பிளாஸ்டிக் ப்ரீ சோன்(plastic free zone)  ஸ்மோக் ப்ரீ சோன் (smoke free zone) என்பதைப் போல் பிஜேபி  ஃப்ரீ சோன்(BJP free zone) ஆக தென்னிந்தியா மாறி இருக்கிறது.அப்படி இந்தியா முழுவதும் மாறினால் தான் கலவரத்தில் இருந்து மக்கள் தப்பிக்க முடியும் என்றும்,மக்களை அலையவிட்டு, அழியவிட்டு மதத்தை யாரும் காப்பாற்றி விட முடியாது என்பதை விவரித்தார்.  2024 தேர்தலில் இந்தியா முழுமைக்கும் கர்நாடகத்தின் தேர்தல் வெற்றி பிரதிபலிக்க வேண்டும் என்றும், பிஜேபியை விரட்டு வதும், நம் மண்ணின் தன்மையை காப்பதும் நம் கடமை என்றார்

எங்கள் கேடயம் திராவிடர் கழகம்:

திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட துணைச் செயலாளர் செந்தில் குமார் தனது உரையில் : தேர்தலில் பங்கேற்கும் இயக்கமல்ல திராவிடர் கழகம். ஆனால், தேர்தலின் போது யார் வரவேண்டும் என்ற மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் இயக்கம் திராவிடர் கழகம் என்றார். திராவிட பாரம்பரியத்தின் வெற்றிக்கு அத் தாட்சி தான் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களின் வெற்றி என்றும், திராவிட முன்னேற்ற கழகம் வாள் எடுத்து சுற்றினாலும், தங்களின் கேடயம் திராவிடர் கழகம் தான் என்பதை பதிவு செய்தார். நான் ஒரு நாத்திகம் பேசும் திமுக காரர் என்பதை பெருமையுடன் வெளிப்படுத்தி, ஆத்திகர்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறார்கள் நாத்திகர்கள் மிக குறைச்சலாக இருக் கிறீர்களே என்று தன்னிடம் யாரேனும் வந்து கேள்வி கேட்டால், மனிதனின் உடல் எடை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் மூளை சிறிய அளவில் தான் இருக்கும். அதுபோல்தான் நாத்திகம் என்று தான் சொல்லும் பதிலை, பகுத்தறிவு உணர்வுடன் பதிவு செய்தார். தொடர்ந்து பெரியார் ,அண்ணா , கலைஞர் காட்டிய பாதையில் தான் இந்த ஆட்சி பயணிக்கும் என்றார். 

கதர்ச் சட்டைக்குள் ஒரு கருப்புச் சட்டை!

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தனது உரையில்; ஈரோடு என்ற சொல் உலக வரைபடத்தில் இருப்பதற்கு காரணம் ஈரோட்டில் பிறந்த தந்தை பெரியார் தான் என்றும், சுயமரியாதை இயக்கம் தொடங்கிய போது அதன் முதல் மாநாடு செங்கல் பட்டிலும், இரண்டாவது மாநாடு  ஈரோட்டில் தான் நடைபெற்றது என்றார். அதேபோல் சுயமரியாதை- சமதர்ம தத்துவத்தை தந்தை பெரியார் வெளியிட்ட ஊரும் இதுதான் என்றும்,அப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த ஊர் தான் ஈரோடு என்று தனது உரையை தொடங்கினார்.   கதர்ச் சட்டைக்குள் கருப்புச் சட்டை என்று காமராஜரை பற்றி கல்கி கார்ட்டூன் வரைந்தது. இன்று அப்படி சொல்ல வேண்டும் என்றால் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களை தான் சொல்ல வேண்டும் என்றார். எந்த அரசியல் பதவிக்கும் திராவிடர் கழகம் செல்லாது. ஆனால், நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்தி லும் பெரியாரின் பெயர்தான் ஒலிக்கிறது.அதற்கு காரணம் தந்தை பெரியாரும், இந்த இயக்கமும்தான் என்றார். சமூகநீதியை பற்றிய தீர்மானங்களை விளக்கி,  தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்று நாம் கேட்பதற்கான நோக்கத்தை புள்ளி விவரத்துடன் பட்டியலிட்டார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழை, எளிய மக்களின் வேலை வாய்ப்புகள் தனியார் துறைகளில் எப்படி பறி போகிறது என்றும், பார்ப்பனர்களின் ஏகபோக ஆதிக் கத்தில் தனியார் துறைகள் இருப்பதை விளக்கியும், அதனை அனைவருக்கும் ஆனதாக மாற்ற வேண்டு மென்றால் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்ற சமூக நீதி குரல் உயர வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இந்த இயக்கத்தை தவிர வேறு ஏதாவது ஒரு இயக்கமோ அல்லது பத்திரிக்கையோ சமூகநீதி எப்படி சீரழிக்கப்படுகிறது என்பதை பேசுவதற்கு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார். எந்த விலை கொடுத்தேனும் நீட் தேர்வை ஒழிப்போம் என்று சொல்லக்கூடிய இந்த இயக்கம் தான், அனைத்து நிலையிலும் சமூக நீதியை பாதுகாத்து,  மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு போராடுகிறது என்றார். மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது தான் எங்களின் நோக்கம் என்று நிறைவு செய்தார்.

மோடி மஸ்தான் வேலை:

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொருளா ளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கணேசமூர்த்தி அவர்கள் தனது உரையில்; காங்கிரசிலும் ஒரு பகுத்தறி வாளராக ஈ.வெ.கி.ச. இளங்கோவன் இருக்கிறார் என்று புகழாரம் சூட்டினார். உண்மையை மறைத்துக் காட்டும் வித்தையை ஊர்ப்பகுதிகளில் மோடி மஸ்தான் வேலை என்பார்கள். இன்று அரசியலிலும் அதே வித்தையை மோடி காட்டிக் கொண்டிருக்கிறார் என்றார். ஒரே நாடு, ஒரே மொழி என்று ஒற்றை கலாச்சாரத்தை திணிக்க விரும்பும் பாசிச பிஜேபியின் தொடர் சர்வாதிகாரப் போக்கினை விளக்கினார். கோவிலில் கூட சமஸ்கிருத மொழியை எப்படி எல்லாம் திணித்தார்கள் என்பதை விளக்கி, அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்றார். இன்றைக்கு பெரியார் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கிறார் என்றும் இந்தியா முழுவதும் மாற்றம் தரும் வகையில் கர்நாடகாவின் தேர்தல் முடிவு வந்திருப்பதாகவும் தெரிவித்தார். நூற்றாண்டு விழா குறித்த தீர்மானத்தை  மிக முக்கியமான தீர்மானம் என்றும்,  அதேபோல்  "மக்கள வைத் தேர்தலும் மக்கள் கடமையும்" என்ற தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும்  பொருளாதார, மத ரீதியாக மக்களை ஒடுக்கக்கூடிய பிஜேபியை 2024  தோல்வியடைய செய்ய வேண்டும் என்றார்.

பிறந்த வீட்டிலிருந்து கிடைக்கும் பாராட்டு:

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் இது தனக்கான பாராட்டு விழா என்பதைவிட, இந்த வெற்றிக்கு காரண மாக இருக்கும் முதல்வருக்கும், கடுமையாக உழைத்த அமைச்சர் பெருமக்களுக்கும் குறிப்பாக முத்துச்சாமி போன்றவர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களுக்கும், காங்கிரஸ் தோழர்களுக்கும் மற்றும் தோழமைக் கட்சி தோழர்களுக்குமான பாராட்டு விழா என்று தனது மகிழ்ச்சியை பதிவு செய்து, இந்த நிகழ்ச்சி பெருமையாக இருக்கிறது காரணம், பிறந்த வீட்டிலிருந்து கிடைக்கக்கூடிய பாராட்டு இது என்றும் , தமிழர் தலைவரிடம் கிடைக்கும் பாராட்டு என்பது பிறந்த வீட்டிலிருந்து கிடைக்கும் பாராட்டு என்றார். கூட்டத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டை குறிப்பிட்டு "ஆசிரியர் கி.வீரமணி 90" என்பதாக தலைப்பு இருக்கிறது அது 60 ஆக இருந்திருக்க வேண்டும் என்றார். எதையும் எதிர்பார்க்காமல் தந்தை பெரியாரைப் பின்பற்றி தந்தை பெரியாரைப் போல், இன்னும் சற்று அதிகமாகவே ஆசிரியர் உழைக்கிறார் என்றார். மக்கள் விழிப்புணர்வு பெற்று உள்ளார்கள் என்பதை கர்நாடக தேர்தல் உறுதிப்படுத்துகிறது. அதேபோல் 2024 பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற நம்மை நாம் அர்பணிக்க வேண்டும் என்று கூறி, மீண்டும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் சிறப்புரையாற்றினார்.

பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் ஈரோடு மாநகர செயலாளர் தே. காமராஜ் அவர்கள் நன்றி கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற  ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களுக்கு பாராட்டு விழா, திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம், கருநாடக தேர்தலில் காங்கிரசு வெற்றி என முப்பெரும் விழாவாக மக்களின் ஆதரவுடன் கூட்டம் நிறைவுற்றது.

பாராட்டுக்கு உரியவர்கள்

திராவிடர் கழக மாநில பொதுக்குழு, தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம். 

13.05.2023 ஈரோட்டில் நடைபெற சிறப்பாகப் பணியாற்றியோர். 1 இரா.நற்குணன் மாவட்டத் தலைவர், 2.மா.மணிமாறன் மாவட்டச் செயலாளர் 3. பேராசிரியர் ப.காளிமுத்து, 4.தே.காமராஜ் மாநகர செயலாளர். 5. வீ.தேவராஜ் மாவட்ட துணைத் தலைவர் .6.து.நல்லசிவம் மாவட்டத் துணைச்செயலாளர். 7. பொதுக்குழு உறுப்பினர் கோ.பாலகிருட்டிணன், 8. பொதுக்குழு உறுப்பினர் செ.பிரகாசன், 9. பொதுக்குழு உறுப்பினர் கு.சிற்றரசு. 10. கோ.திருநாவுக்கரசு மாநகர தலைவர், பவானி அசோக் குமார். கடைவீதி வசூல் குழு சிறப்பாகப் பணியாற்றியோர்.. 1 ஆத்தூர் அ.சுரேஷ், 2. ஈரோடு கி.பிரபு, 3. வெண்ணந்தூர் செல்வகுமார் 4. பள்ளி பாளையம் பொன்னுசாமி. 5. நீடாமங்களம் லட்சுமணன், 6.விமல் 7. தலைவாசல் முத்துலட்சுமி சேகர், பிரேமா.

........

பங்கேற்றோர்

வரவேற்புரை: மாவட்டச் செயலாளர் மணிமாறன்

தலைமை: மாவட்டத் தலைவர் நற்குணன்

முன்னிலை: தலைமைக் கழக அமைப்பாளர்: சண்முகம், கோபி மாவட்டத் தலைவர்: சிவலிங்கம், பொதுக்குழு உறுப்பினர்: சிற்றரசு, பேராசிரியர் காளிமுத்து, பொதுக்குழு உறுப்பினர்: பாலகிருஷ்ணன், கோபி மாவட்டச் செயலாளர்: வழக்குரைஞர் சென்னியப்பன், மாநகரத் தலைவர்: திருநாவுக்கரசு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்: 

ஈ.வெ.கி.ச.இளங்கோவன் 

கழகத் துணைத் தலைவர்: 

கவிஞர் கலி.பூங்குன்றன்

ம.தி.மு.க. பொருளாளர், நாடாளுமன்ற உறுப்பினர்: ஈரோடு கணேசமூர்த்தி

தி.மு.க. தெற்கு மாவட்ட துணைச் செயலாளர்: செந்தில்குமார்

காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்டத் தலைவர்: சரவணன்

காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட பொறுப்பாளர்: திருச்செல்வம்

கழக பொருளாளர்: வீ.குமரேசன்

கழக பொதுச் செயலாளர்: துரை.சந்திரசேகரன்

பிரச்சார செயலாளர்: வழக்குரைஞர் அருள்மொழி

காங்கிரஸ் கட்சி மேனாள் சட்டமன்ற உறுப்பினர்: ஆர்.எம்.பழனிச்சாமி

நன்றியுரை: ஈரோடு மாநகர செயலாளர் காமராஜ்

மந்திரமா? தந்திரமா? 

நிகழ்ச்சி நடத்திய ஈட்டி கணேசன்



No comments:

Post a Comment