சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
சென்னை, மே 12 கரும்புக்கு ஒன்றிய அரசு நிர்ணயித் துள்ள ஆதார விலை, நியாய மான சந்தை விலை கிடையாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக விவசாய சங்கத் தலைவர் அய்யாகண்ணு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய் திருந்த மனுவில் கூறியிருப்ப தாவது:
தஞ்சாவூர் மற்றும் கடலூரில் செயல்படும் திருஆரூரான் சர்க் கரை ஆலைக்கு கரும்பு விநி யோகம் செய்த விவசாயிகளுக்கு, ரூ.157 கோடி கொள்முதல் நிலுவைத் தொகை உள்ளது. விவசாயிகளுக்கு வழங்க வேண் டிய நிலுவைத் தொகையை ஆலை நிர்வாகம் இதுவரை வழங்க வில்லை. எனவே, உடனடியாக நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு வழங்குமாறு ஆலை நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண் டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆலை நிர்வாகம் தரப்பில், தங்களால் முழு தொகையையும் தற்போது வழங்க இயலாது,57 சதவீத தொகையை வழங்கத் தயாராக இருப்பதாகவும், அதன் படிரூ.78 கோடியில், ரூ.45 கோடியை ஏற்கெனவே டெபா சிட் செய்து விட்டதாகவும், அதில் ரூ.37 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், ஆலை நிர்வாகம் வழங்குவதாக ஒப்புக்கொண்ட ரூ.78 கோடியில் ஏற்கெனவே ரூ.45 கோடி வழங்கப் பட்டுள்ள நிலுவையில், மீதமுள்ள ரூ. 33 கோடியை மூன்று மாதங் களில் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், கரும்பு விவசாயிகளுக்கு மத் திய அரசு நிர்ணயம் செய்துள்ள ஆதார விலை நியாயமான சந்தை விலை கிடையாது. விவசாயிகளின் உழைப்புக்கு ஏற்ப கூடுதல்விலை கொடுத் தால் மட்டுமே,அவர்களின் வாழ்வாதாரம் செழிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment