அறிவியல் செய்தி பூமி அளவில் புதிய கோள் கண்டுபிடிப்பு உயிரினம் வாழும் சாத்தியம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 22, 2023

அறிவியல் செய்தி பூமி அளவில் புதிய கோள் கண்டுபிடிப்பு உயிரினம் வாழும் சாத்தியம்

புதுடில்லி மே 22- சூரிய மண்டலத்துக்கு வெளியேயுள்ள தென்பகுதி விண்மீன் தொகுப்பில் 90 ஒளி ஆண்டுகள் தூரத்தில் ஒரு கோள், சிறிய சிவப்பு நிற நட்சத்திரத்தை சுற்றிக் கொண்டிருப்பதை அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் சுமித்னோனியன் நிறுவனத்தின் வான் இயற்பியல் மய்ய ஆய்வாளர்கள் குழு கண்டு பிடித்துள்ளது. 

இதற்கு எல்பி 791-18 என பெயரிடப்பட்டுள்ளது. நாசாவின் ‘டெஸ்’ என்ற ஆய்வு செயற்கைக்கோள் மூலம் இந்தக் கோளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த கண்டுபிடிப்பு பற்றி ‘நேச்சர்’ என்ற இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது. 

அதில் ஆய்வாளர்கள் கூறியிருப்பதாவது: எல்பி 791-18 கோள் பூமியைவிட சற்று பெரிதாக உள்ளது. நட்சத்திரத்தை நோக்கியுள்ள இந்த கோளின் பகுதி அதிக வெப்பமுடையதாக இருக்கலாம்.

அந்த கோள் முழுவதும், குழம்புகளை வெளி யேற்றும் எரிமலைகள் இருப்பது போல் தெரிகிறது. இந்த கோளின் மறு பக்கத்தில் தண்ணீர் இருக்கலாம். இதனால் அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்களும் இருக்கலாம். வியாழன் கோள் மற் றும் அதன் நிலவுகளிலும் இதே போன்ற அமைப்புகள் உள்ளன. புவியியல் அடிப்படையில் இந்த கோள் இருந்தால், இதில் வளிமண்டலமும் இருக்கலாம். 

இவ்வாறு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment