கோவை, மே 12- கோவை மண்டல மகளிரணி செயலாளர் பா.கலைச் செல்வியின் மாமாவும் ஒன்றிய கழக பொறுப்பாளர் சா.சிவ குமாரின் சகோதரருமான தோழர் சா.சித்திரவேல் அவர்கள் ரயில் பயணத்தின் போது ஏப், 29 அன்று மறைவுற்றார்.
அவரின் படத்திறப்பு நினை வேந்தல் நிகழ்வு 6.5.2023 அன்று காலை 11 மணி அளவில் பூங்காநகர் அவருடைய இல்லத்தில் மாவட்ட காப்பாளர் ம.சந்திரசேகர் தலை மையில் நடைபெற்றது
கோவை மாநகராட்சி உறுப் பினரும் திமுக தெற்கு மண்டல தலைவருமான தனலட்சுமி ரங்க நாதன் மறைந்த சா.சித்திரவேல் படத்தை திறந்து வைத்து இரங்கல் உரை ஆற்றினார். கழக சொற் பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் நினைவேந்தல் உரையாற்றினார்.
தோழர் சித்திரவேல் அவர்கள் 1985ஆம் ஆண்டு முதல் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். கோவை சுந்தராபுரம் உள்ளிட்ட பலபகுதியில் நடை பெற்ற ஏராளமான கழக நிகழ்ச்சி களில் இயக்கப் பணி ஆற்றி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று கழக தோழர்களின் பலரின் அன்பையும் பெற்றவர். அரசு மருத்துவமனையில் ஊழியராக பணிக்கு சேர்ந்த பிறகு பகுத்தறிவாளர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு இறுதி வரை பகுத்தறிவாளராகவே வாழ்ந் தவர். மருத்துவப் பணியின்போது எளிய கழகத் தோழர்களுக்கும், தோழமை கட்சி நண்பர்களுக்கும், ஏழை பொதுமக்களுக்கும் மருத் துவ சிகிச்சைக்கு தேவையான உத விகளை ஏற்பாடுகளை, ஆலோச னைகளை வழங்கி சிறந்த மனித நேய தொண்டராக விளங்கியவர் - அவர் புகழ் வாழ்க என்று கூறினார் கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன்.
கோவை மாவட்ட தலைவர் திக செந்தில்நாதன், மேட்டுப்பா ளையம் மாவட்ட தலைவர் சு. வேலுச்சாமி, பொதுக்குழு உறுப் பினர்கள் பொள்ளாச்சி தி. பரம சிவம், பழ. அன்பரசு, மாவட்ட அமைப்பாளர் மு. தமிழ்செல்வம், மாநகர செயலாளர் வே.தமிழ் முரசு, பேராசிரியர் தவமணி, மண் டல மகளிரணி செயலாளர் கலைச் செல்வி, பகுதி கழக செயலாளர்கள் தெ.குமரேசன், கவி.கிருஷ்ணன், இல. கிருஷ்ணமூர்த்தி, பக மாவட்ட தலைவர் சின்னசாமி, பக செயலாளர் அக்ரி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர் தி.க.காளிமுத்து, மாவட்ட இளை ஞரணி தலைவர் இரா.சி. பிரபாக ரன், மாவட்ட இளைஞரணி செய லாளர் தக கவுதமன், தொழிலா ளரணி மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட தொழி லாளரணி அமைப்பாளர் செல்வக் குமார், பொருளாளர் முத்துமலை யப்பன், மதுக்கரை ஒன்றிய தலை வர் ந.மருதமுத்து, செயலாளர் பொன்ராஜ், தொண்டாமுத்தூர் ஒன்றிய அமைப்பாளர் பா. ஜெயக் குமார், தா. சூசைராஜ், ப.சிவக் குமார், ஆனந்த், ஆ. அருண், ந.குரு, ஆவின் சுப்பையா, இருதயராஜ், கா.கவுதமன், ஞா.ம.தமிழ்ச்செல் வன், தி.க. செல்வம், இரா. காமராஜ், கா. பிரபாகரன், ஆடிட்டர் ஆனந்த ராஜ், கு.அஜித், இரயில்வே இராம தாஸ், முருகானந்தம், ரமேஷ், அர் ஜுனன், முத்கணேசன், பழனியப் பன், அ.மு.ராஜா, மகளிரணி
ச.திலகமணி. கு.தேவிகா, வ. ராஜேஸ் வரி, கி.கவிதா, முத்துமணி, செ. ஆ. மகேஸ்வரி, ந.வேனீஸ்வரி, த. கயல் விழி, வீ. சகாயமேரி, செ. ஜோதி மணி, கல்பனா. பு. சுமதி, தனலட் சுமி, மற்றும் 95ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் திமுக பகுதி கழக செயலாளர் எஸ்.ஏ.காதர், 100ஆவது வார்டு மாமன்ற உறுப் பினர் திமுக பகுதி கழக செயலாளர் இரா.கார்த்திகேயன், எஸ்டிபிஅய் அப்துல் கரீம், விசிக அந்தோணி அன்பரசு, முரளி, உள்ளிட்ட திமுக, மதிமுக, காங்கிரஸ், விசிக, உள்ளிட்ட அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உடன் பணியாற்றிய மருத்துவமனை நிர்வாக ஊழியர்கள் அரசு பொது மருத்துவமனை, ந.சிவக்குமார், இளநிலை நிர்வாக அலுவலர் அரசு பொது மருத்துவமனை, எஸ்.மகேஸ்வரன், நிர்வாக அலு வலர் முருகேசன், உள்ளிட்ட ஊழி யர்கள் நன்பர்கள் உறவினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு மரியாதை செலுத்தினர்.
நிறைவாக சா.சிவகுமார் நன்றி யுரையாற்றினார்.
No comments:
Post a Comment