சென்னை மே 25 - சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, பணி ஓய்வு பெற்றார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் சார் பில் வழியனுப்பு விழா உயர்நீதி மன்றத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், பொறுப்புத் தலைமை நீதிபதியை, அட்வ கேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந் தரம் வாழ்த்தி பேசியதாவது:
2009ஆ-ம் ஆண்டு கூடுதல் நீதிபதியாக நீதிபதி டி.ராஜா நிய மிக்கப்பட்டார். தற்போது இந்தப் பாரம்பரிய உயர்நீதிமன்ற பொறுப்புத்தலைமை நீதிபதி யாக ஓய்வு பெறுகிறார். அவரது சொந்தக் கிராமத்தில் எந்தக் கடையிலும் சிகரெட் விற்கப்படுவது இல்லை. கிராமத்தைச் சேர்ந்த யாரும் மது குடிப்பது இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
ஓய்வு நீதிபதி டி.ராஜா பேசுகையில், மதுரையிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தென்னூர் என்ற கிராமத்தில், ஒரு விவசாயி மகனாகப் பிறந்து, தற்போது இந்த பாரம்பரிய உயர் நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக ஓய்வு பெறுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
என்னுடைய நீதிபதி பணிக் காலம் மிகவும் திருப்தியாக அமைந்தது. ஒரு பணியில் சேரும் போது ஒருநாள் ஓய்வு வரும் என்பது விதியாகும். அந்த வகை யில் 14 ஆண்டுகள் உயர்நீதி மன்றம் நீதிபதியாகவும், 8 மாதங் கள் பொறுப்புத்தலைமை நீதி பதியாகவும் பணியாற்றி மகிழ்ச்சி யுடன் ஓய்வு பெறுகிறேன் இளம் வழக்குரைஞர்கள் உச்சநீதிமன் றம், உயர்நீதிமன்றம் என்று எங்கு வாய்ப்பு கிடைத்தாலும் அதை முழுமையாகவும், சரியா கவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதற்கு ஆங்கிலப்புலமையை கட்டாயமாக வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வெற் றிகரமான வழக்குரைஞர்களாக திகழ முடியும். நீதிமன்றத்தில் நடைபெறுகின்ற வாதங்களை உன்னிப்பாக கவனிக்கவேண்டும். சட்டப்புத்தகங்களை அதிகம் படிக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் இளம் வழக்குரைஞர்களுக்கு வெற்றி நிச்சயம். அவர்களுக்கு வானமே எல்லையாக அமையும். இவ் வாறு அவர் பேசினார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி பணி ஓய்வு பெற்ற பின், பொறுப்புத்தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி எம். துரைசாமி நியமிக்கப்பட்டார். அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, புதிய பொறுப்பு தலைமை நீதி பதியாக டி.ராஜா அதற்கு மறுநாள் செப்டம்பர் 22ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்டார்.
கூட்டுறவு சங்கங்களுக்கு 6 மாதங்களில் தேர்தல் நடத்த வேண்டும். கோவில் நிலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் கட்ட அனுமதி யளித்தது. வேங்கைவயல் குடி நீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் ஒரு நபர் ஆணையம் அமைத்தது. மாற் றுத் திறனாளி களுக்கு ஏதுவாக தாழ்வுதள பேருந்துகள் கொள் முதல் செய்வது போன்ற பல முக் கிய உத்தரவு களை பிறப்பித்தார்.
சொந்த மாநிலத்தில் நீண்ட காலம் பொறுப்புத்தலைமை நீதி பதியாக பதவி வகித்த இவரை 2 முறை ராஜஸ்தான் உயர்நீதி மன்ற நீதிபதியாக மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜி யம் பரிந்துரை செய்தது. ஆனா லும், இவர் 8 மாதங்கள் பொறுப் புத்தலைமை நீதிபதியாக பதவி வகித்து நேற்று (24.5.2023) ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment