செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 22, 2023

செய்திச் சுருக்கம்

தீர்வு

ரயில் பயணிகளின் புகார்கள், குறைகளை விரைவாக தீர்க்கும ‘ரயில் மடாட்' மூலமாக, தெற்கு ரயில்வேயில் 2022-2023ஆம் நிதியாண்டில் 90,963 புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக தகவல்.

சீருடை-யுத்தம்

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு சீருடை மற்றும் பாடப் புத்தக கட்டணத்தை, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி களுக்கு வழங்க வேண்டியது அரசின் கடமை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஆராய குழு...

கூட்டுறவுத் துறையின் கீழ் பணியாற்றும் ரேஷன் கடை பணியாளர்களை பொதுவான பணி நிலை வரம்புக்குள் கொண்டு வருவதால் ஏற்படும் சாதக-பாகதங்கள் குறித்து பரிசீலித்து அறிக்கை அளிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ்

ஒன்றிய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் நாடெங்கிலும் உள்ள 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பணம் செலுத்தாமல் சிகிச்சை பெற முடியும். இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிய சுகாதார அமைச்சகம் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் ஆகியவற்றின் இடையே கையெழுத்திடப்பட்டுள்ளது.

மாற்ற...

வரும் 23ஆம் தேதி முதல், வங்கிகளில் ரூ.2000 நோட்டுக்களை மாற்ற சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட உள்ளன. அதே நேரத்தில் வயதானோர் வரிசையில் நிற்பதை தடுக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என வங்கி அதிகாரிகள் தகவல்.

பதுக்கல்...

ரூ.7 லட்சம்கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்டதில், 4 லட்சம் கோடி ரூபாய் யார் மூலமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் கேள்வி எழுப்பியுள்ளது.


No comments:

Post a Comment