தொழிற்சங்கத் தலைவராக இருந்த சேலம் டி.ஆரோக்கியசாமி தொழி லாளர் தினமான நேற்று (1.5.2023) இரவு 8.30 மணிய ளவில் சென்னையில் மறை வுற்றார். அவருக்கு வயது 83. அண்மைக்காலமாக உடல் நலம் குன்றியிருந்தார்.
தந்தை பெரியார் பற்றாளரான சேலம் டி.ஆரோக்கியசாமி இளமைக்காலத்தில் கம்யூனிச வாதியாக இருந்தவர். சென்னையில் பணி புரிந்த நிறுவனத்தின் தொழிற்சங்கத் தலைவராகப் பணியாற்றிய போது இவரின் புரட்சிகரப் பேச்சால், நிறுவனத்தின் அச்சுறுத்தலால் அங்கிருந்து வெளியேறி வெளிநாட்டில் பணிபுரிய சென்றுவிட்டார். தமிழ்நாடு திரும்பி சேலத்தில் குடியேறினார்.
தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, தந்தை பெரியாரின் புத்தகங்களைப் படித்ததோடு மட்டுமல்லாமல் பெரியாரின் புத்தகங்களைப் பலருக் கும் அன்பளிப்பாக அளிப்பார். சேலத்தில் நடைபெறும் திராவிடர் கழகத்தின் பொதுக் கூட்டங்களிலும், தெரு முனைப் பரப்புரைக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு பல்வேறு செய்திகளை விளக்கிப் பேசுவார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மீது மிகுந்த மரியாதையையும், அன்பையும் கொண்டவர். " ஆசிரி யரின் தலைமையே சரியான வழி" என்று தோழர்களி டத்தில் அடிக்கடி கூறுவார்.
அவரின் பிறந்தநாள் (அக்டோபர் 30) அன்று எப்போதும் போல் சேலம் கழகத் தோழர்கள் அவரின் இல்லம் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர். அனைவருக்கும் உணவளித்து சிறப்பிப்பார்.
சேலம் மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பாக மாவட்ட தலைவர் அ.ச.இளவழகன் தலைமையில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
உடல் நல்லடக்கம் சென்னையில் இன்று (2.5.2023) நடைபெற்றது.
No comments:
Post a Comment