சிங்கப்பூரில் நீதிமன்றம், நாடாளுமன்றம் ஆகிய முக் கியமான அரசமைப்புகளில் சிறந்த மொழி பெயர்ப்பாள ராக - நன்கு பலராலும் அறியப்பட்ட நண்பர்
திரு ஆ. பழனியப்பன் அவர்கள் நேற்று (4.5.2023) பிற்பகலில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.
சிங்கப்பூருக்கு நாம் சென்றிருந்தபோது ஒரு முறை, நாடாளுமன்ற வளாகத்திற்கு நம்மை அழைத்து - 'செம்மொழி ஆசிரியர் நண்பர் இலியாஸ்' அவர்களுடன் - முழுமையான வரலாறு, விளக்கத்தை மிக நேர்த்தியாக நமக்குத் தந்த ஆற்றலாளர்.
சிறந்த பண்பாளர் - மனிதநேயர்! அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர் களுக்கு நமது ஆறுதலையும், மறைந்த அவருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
சென்னை தலைவர்,
திராவிடர் கழகம் 5.5.2023
No comments:
Post a Comment