பெங்களூரு,மே31 - கருநாடக மாநி லத்தில் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட் டுள்ளது. கருநாடகா சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் வென்று 20ஆம் தேதி முதலமைச்சராக சித்தராமையா, துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமார் உள்பட 8 பேர் அமைச்சர் களாக பதவியேற்றனர்.
அதை தொடர்ந்து கடந்த 27ஆம் தேதி இரண்டாவது கட்ட அமைச்சரவை விரி வாக்கம் நடந்தது. இதில் 24 பேர் அமைச் சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கான துறைகள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து புதிய அரசா ணையை அரசு வெளியிட்டது. அதில் முதலமைச்சர் சித்தராமையா தனது வசம் நிதி, தகவல் மற்றும் உயிரியல், உளவுத்துறை மக்கள் தொடர்பு ஆகிய வற்றை வைத்துள்ளார். துணை முதல மைச்சர் டி.கே.சிவகுமாருக்கு பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனம், பெங் களூரு மாநகர மேம்பாடு, மாநகராட்சி, ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தினேஷ்குண்டுராவுக்கு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையும், பரமேஸ் வருக்கு உள்துறையும், ராமலிங்க ரெட்டிக்கு போக்குவரத்து துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment