சபாஷ் - சரியான தீர்ப்பு மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் உச்சநீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 11, 2023

சபாஷ் - சரியான தீர்ப்பு மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, மே 11 டில்லியில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர் பாக டில்லி அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, '' மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசின் கையில் தான் உண்மையான நிர்வாக அதிகாரம் இருக்க வேண் டும் '' எனக்கூறியுள்ளது.

டில்லி மாநில அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. டில்லி நிர்வாக மாற்றம் தொடர்பாக ஒன்றிய அரசு சில சட்ட திருத்தங்களை செய்தது.இதனை எதிர்த்து டில்லி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் 2019இல் மனு தாக்கல் செய்யப் பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூஷண் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதனால், வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதி பதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப் பட்டது.

வழக்கில் 5 நீதிபதிகள் ஒரு மனதாக பிறப்பித்த உத்தரவு: ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி கொள்கை என்பது நமது அரசி யல்சாசனத்தின் அடிப்படை கூட்டமைப்பின் அங்கம். யூனியன் பிரதேசமான டில்லி கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.

மக்களால் தேர்வு செய்யப் பட்ட அரசுக்கு, அதிகாரிகளை கட்டுப் படுத்தும் அதிகாரம் வழங்கப் படாதது தவறு. டில்லியில் அரசு அதிகாரிகளை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதை ஏற்க முடியாது. 2019இ ல் நீதிபதி அசோக் பூஷன் அமர்வு வழங்கிய தீர்ப்பில் உடன்பாடில்லை.

மக்களின் விருப்பத்தை நிறை வேற்றவே டில்லி சட்டமன்றத் திற்கு  சட்டம் இயற்றும் அதி காரம் வழங்கப்பட்டது.மாநில அரசின் நிர்வாக அதிகாரங்களை ஒன்றிய அரசு எடுத்துக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதிகார வரம் பிற்குள் அதிகாரிகள் இல்லை யென்றால் அரசின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள் ளாகும். மக்களால் தேர்வான அரசுக்கு அதிகாரிகளை கட்டுப் படுத்தும் அதிகாரம் வழங்கப் படாதது தவறு.மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசின் கையில் தான் உண்மை யான நிர்வாக அதிகாரம் இருக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.


No comments:

Post a Comment