புதுடில்லி, மே 27- கருநாடக சட்டமன்ற தேர்தலில் 135 தொகுதியில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத் துள்ளது.
முதலமைச்சராக சித்தராமை யாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் உள்ளனர். இதுதவிர 8 அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர். இதுவரை எந்த அமைச்சர்களுக்கும் துறைகள் ஒதுக்கப்படவில்லை.
இந்த நிலையில், கருநாடக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக, கருநாடக முதல மைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை டில்லியில் உள்ள அவர்களது இல்லத்தில் நேற்று (26.5.2023) சந்தித்து ஆலோ சனை நடத்தினார். கருநாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த பிறகு சோனியா காந்தியை சித்தராமையா சந்திக்கும் முதல் சந்திப்பு இது வாகும்.
அமைச்சர்கள் பதவிக்கு 20-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் காங். மேனாள் தலைவர் ராகுல் காந்தியிடம் ஒப்புதல் பெற்ற பிறகு புதிய அமைச்சர்கள் பட்டியல் குறித்த இறுதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி யுள்ளன.
No comments:
Post a Comment