அய்யாவும் சொல்கிறார்!
ஆங்கிலோ-இந்தியர்கள் எப்படியோ அதேபோலத்தான் இந்நாட்டுப் பார்ப்பனர்களும். ஆங்கிலோ- இந்தியர்களை நம் நாட்டுத் தாய்மார்கள் ஈன்றெடுத்தவர்கள் தாமே? ஆனால் அவர்களுக்கு சற்றாவது நம் நாட்டு உணர்ச்சி இருக்கிறதா? நமது மக்களைப் பார்த்தால் “டேய், டமில் மனுஷா” என்று கேவலமாகத் தானே கூறுகின்றனர். அவர்கள் யார்? எந்த நாட்டில் பிறந்தவர்கள் என்ற வரலாற்றை அறியாமல், தான் ஏதோ அய்ரோப்பாவில் பிறந்து இங்கு குடியேறியது போல ஜாதி ஆணவத் துடன் அல்லவா நடக்கிறார்கள்?
அதைப் போலவே இந்நாட்டுப் பார்ப்பனர்களும் மேல்நாட்டில் இருந்து வந்து குடியேறிய ஆரியர்களுக்கும் நம் நாட்டவர்களுக்கும் பிறந்தவர்களாய் இருந்தும் கூட ஆரிய ஜாதி முறைகளையும், அதற்கான ஆணவத்தையும் கொண்டு நாட்டுக்குரிய நம்மைக் கீழ் ஜாதிகளாக அடிமைகளாக மதித்து நடத்துகிறான்.
- தந்தை பெரியார் (‘குடி அரசு’ 28-5-1949)
அம்பேத்கரும் சொல்கிறார்!
தனது மூதாதையர்கள் உருவாக் கிய பார்ப்பனீய தத்துவத்தை ஒவ் வொருபார்ப்பானும் நம்புகிறான். இந்து சமுதாயத்திலே அவன் ஒரு அன்னியனாக இருக்கிறான். பார்ப்பானை ஒரு ஒரு பக்கம் நிறுத்தி, மற்றொரு பக்கம் சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று கருதுபவர்களையும் நிறுத்தி ஒப்பிட்டுப்பார்த்தால் இந்த இரண்டு பிரிவினரும் இருவேறு அயல் நாட்டின ரைப் போல்தான் தோன்றும்.
ஒரு ஜெர்மனியனுக்கு ஒரு பிரஞ்சுக்காரன் எப்படி அன்னியனோ, ஒரு வெள்ளைக் காரனுக்கு ஒரு நீக்ரோ எப்படி அன்னி யனோ, அது போலவே பார்ப்பான் சூத்திரர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் அன்னியனாவான்.
- டாக்டர் அம்பேத்கர் (காந்தியும் காங்கிரசும் தீண்டப் படாதோருக்கு செய்தது என்ன?” என்ற நூலின்
பக்கம் 215)
No comments:
Post a Comment