சென்னை, மே 23- மாணவர்களுக்கு இலவச பேருந்து அட்டை, ஆசியாவி லேயே பெரிய அண்ணா நூலகம் உருவாக்கம் உள்ளிட்ட ஏராளமான நலத் திட்டங்கள் என நவீன தமிழ் நாட்டை உருவாக்கிய சிற்பிதான் கலைஞர் என்று தமிழ்நாடு முதல மைச்சர் மு.க ஸ்டாலின் கூறினார்.
மறைந்த திமுக தலைவரும், மேனாள் முதலமைச்சருமான கலைஞரின் நூற் றாண்டு விழா ஜூன் 3ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவை பிரமாண்டமாக கொண்டாட திமுக தலைமை திட்டமிட்டு உள்ளது நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது குறித்து ஆலோசிப்பதற்காக திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (22.5.2023) நடைபெற்றது.
இந்த நிலையில், மேனாள் முதல மைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை அரசு கொண்டாடுவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், அமைச்சர்கள் மற்றும் அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினார்.
நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், அரசுத்துறை செயலாளர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கலைஞரின் நூற்றாண்டு விழா தொடர் பாக அரசு சார்பிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் என்னென்ன நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆலோசனை நடத்தினார். அப்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறிய தாவது:-
இஸ்லாமிய சமூகத்திற்காக 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் இணைத்தது. நுழைவுத்தேர்வு ரத்து. மாணவர்களுக்கு இலவச பேருந்து அட்டை வழங்கியது. சேலம் உருக்கு ஆலை. சேலம் புதிய ரயில்வே மண்டலம், நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், ஒக்கேனக் கல் கூட்டுக்குடிநீர் திட்டம், ராமநாத புரம் கூட்டுகுடிநீர் திட்டம். ஆசியாவி லேயே பெரிய அண்ணா நூலகம் ஆகிய திட்டங்கள் உருவகம்.
மாற்றுத் திறனாளிகள் திருநங் கைகள் ஆகியோருக்கு மறுவாழ்வு வழங்கியது. ஏராளமான கலை அறிவியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரி கள் உருவாக்கியது. இப்படி நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் தான் கலைஞர் அப்படிப்பட்ட கலைஞருக்கு தான் அரசு சார்பில் நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கான ஆலோசனை யில் ஈடுபட்டு இருக்கிறோம்.
கலைஞரைப் பெருமைப்படுத்தும் விழாவாக மட்டும் இல்லாமல் தமிழ் நாட்டிற்கு அவர் நிறைவேற்றிய திட்டங்களை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் இந்த விழாக்கள் அமைய வேண்டும். மாதம் தோறும் ஒவ்வொரு பொருளின் அடிப்படையில் இந்த விழாக்களை நடத்தலாம். பெரிய விழாக்கள் மட்டும் இன்றி அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வகையில் இந்த விழாக்கள் நடத்த வேண்டும்.
நவீன ஊடகங்களை இதற்கு பயன் படுத்த வேண்டும். செய்தி மக்கள் தொடர்பு துறை இதற்கு முக்கிய பங்காற்ற வேண்டும்.
அரசு நடத்துவதாக மட்டும் இல் லாமல் பல்கலைக்கழகங்கள், கல்லூரி கள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள் , பயன் அடைந்த வர்கள் இணைந்து கொண்டாடுவதாக அது அமைய வேண்டும். அமைச்சர்கள் கொடுத்த ஆலோசனைகளை வரிசைப் படுத்தி தொகுத்து பின்னர் அதிகாரப் பூர்வாமாக அறிவிக்கப்படும்.
நூற்றாண்டு விழா தலைமைக் குழு, விழாக்குழு, மலர்க்குழு, கண்காட்சி குழு போன்ற குழுக்கள் அமைசர்களை உள்ளடக்கி உருவாக்கப்படும். இந்த குழுக்கள் தங்களுக்குள் அடிக்கடி கூடிப்பேசி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
இந்த கூட்டம் தொடக்க கூட்டம் தான். தொடர்ந்து நாம் பெசுவோம். இது குறித்து அரசாணை விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
No comments:
Post a Comment