தவிர்க்க...
பணம் கொடுக்கல் - வாங்கல் தொடர்பான சிவில் பிரச்சினைகளில் மோசடி வழக்குகளை பதிவு செய்வதைத் தவிர்க்க காவல் துறை ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தும்படி காவல்துறை தலைமை இயக்குநருக்கு மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞர் கடிதம் எழுதியுள்ளார்.
பலகைகள்
நாடு முழுவதும் அனைத்து ரயில் நிலையங்களிலும் ஒரே மாதிரியான பெயர்ப் பலகைகள் வைக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.
மருத்துவர்களுக்கு...
அனைத்து மருத்துவர்களுக்கும் இனி தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் மாநில மருத்துவ கவுன் சிலில் பதிவு செய்ய வேண்டும் எனவும், அவர்களுக்கு என தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படும் என தேசிய மருத்துவ கவுன்சில் கூறியுள்ளது.
பயன்பாட்டிற்கு...
சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையத்தை வரும் ஜூனில் முதலமைச்சர் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பார் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்.
புதிய நிதியம்
மின் வாரிய ஓய்வூதியத்தை வழங்குவதற்கு என்று தனியாக புதிய நிதியம் ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் ஓய்வூதியத்தை வழங்க மின்வாரியம் முடிவு செய்துள்ளதாக மின்வாரிய ஓய்வூதியதாரர்கள் சங்கத் தினர் தகவல்.
தொழில்...
‘டெல்டா' மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகள் விரைவில் அமைக்கப்படும் என தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்.
சட்டங்கள்
மக்கள் புரிந்துகொள்ள சிரமமில்லாத வகையில், எளிய மொழி நடையில் சட்டங்கள் அமைய வேண்டும் என சட்ட வரைவாளர்களுக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment