காந்திநகர், மே 18 - குஜராத்தில் மருத்துவரை தற்கொலைக்குத் தூண்டியதாக அந்த மாநில பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஷ் சுதாஷ்மா மற்றும் அவரின் தந்தை நரன்பாய் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அந்த மருத்துவர் தற்கொலை செய்து சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் கைது நட வடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
குஜராத்தின் விராவல் நகரைச் சேர்ந்த மருத்து வர் அதுல் சாக், கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற் கொலை செய்து கொண்டார்.
அப்பகுதியில் மிகவும் பிரபலமான மருத்துவ ரான அதுல், தற்கொலைக்கு முன்பு பாஜக நாடாளு மன்ற உறுப்பினர் ராஜேஷ், அவரது தந்தை நரன் பாய் மீது குற்றஞ்சாட்டி குறிப்பு எழுதி இருந்தார். இது தொடர்பாக அவரது மகன் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரின் தந்தை மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யாமல் இருந்தனர். இதையடுத்து, காவல் துறையினருக்கு எதிராக மருத்துவரின் மகன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் திடீரென பாஜக நாடாளுமன்ற உறுப்பினர். ராஜேஷ் மற்றும் அவரின் தந்தை மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட மருத்துவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரின் தந் தைக்கு சுமார் 20 ஆண்டு கால பழக்கம் இருந்துள் ளது. மருத்துவரிடம் இருந்து பல்வேறு தவணை யாக, இருவரும் சுமார் ரூ.1.75 கோடி கடன் பெற்று உள்ளனர். பணத்தை திருப்பி அளிப்பதற்காக அளித்த காசோலைகள் வங்கியில் பணமில்லாத தால் திரும்பி வந்தது.
இது தொடர்பாக மருத்துவர் அதுல் அவர்களை தொடர்பு கொண்டபோது, பணத்தை தர மறுத்த துடன் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படு கிறது. இதனால் விரக்தியடைந்த மருத்துவர் அதுல், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரின் தந்தை பணம் கொடுக்காமல் தன்னை ஏமாற்றியதை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
No comments:
Post a Comment