ஏட்டுத் திக்குகளிலிருந்து.. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 8, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து..

 8.5.2023

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

👉ஆரிய படையெடுப்பை முறியடிக்கும் ஆயுதம் திராவிடத் தத்துவம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

👉 ஹிட்லர் மற்றும் ஈரான் நாட்டின் அயதுல்லா கொமேனி இருவரின் கலவைதான் பிரதமர் மோடி என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் சாடல்.

👉 அகில இந்திய வானொலி என்பதை ஆகாஷ்வாணி என மாற்றக் கூடாது, திமுக கண்டனம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉 கருநாடகாவில் இரட்டை என்ஜின் ஆட்சி (மத்தியி லும் மாநிலத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி) நடைபெறு கிறது என்ற மோடியின் பேச்சுக்கு, 40 சதவீத கமிஷனில் எந்த இன்ஜினுக்கு எவ்வளவு கிடைத்தது என்பதை கருநாடக மக்களுக்கு சொல்லுங்கள் என மோடிக்கு ராகுல் கேள்வி.

👉கருநாடக தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், காங்கிரசுக்கு வீரசைவ லிங்காயத் மன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment