புதுடில்லி,மே 4 - உத்தர பிரதே சத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பிணை மறுக்கப்பட்ட 2 சம்ப வங்கள் குறித்து மூத்த வழக்குரைஞர் சித்தார்த் லுத்ரா உச்ச நீதிமன் றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார். அதில், ‘‘திருமண சர்ச்சை வழக்கு ஒன்றில் விசாரணையின் போது கைது செய்யப்படாத போதிலும் கணவர், அவரது தாய், தந்தை மற்றும் சகோதரருக்கு லக்னோ செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி முன் பிணை மறுத்து விட்டார். அதேபோல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு காஸி யாபாத் சிபிஅய் சிறப்பு நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துவிட்டது.
கைது செய்ய வேண்டிய அவசியமில்லாத வழக்குகளில் பிணை வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் பல முறை உத்தர விட்டுள்ளது. அந்த உத்தரவுகளை செஷன்ஸ் நீதிபதி பின்பற்றவில்லை’’ என்று சித்தார்த் லுத்ரா வாதா டினார்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல் மற்றும் அசனுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரித்து தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது:
‘‘போலீஸ் காவல் தேவைப் படாத வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தாராள மாக பிணை வழங்கலாம். இயந்திரத்தனமாக அவர்களை காவலில் வைக்க உத்தரவிடக் கூடாது’’ என்று உச்ச நீதிமன்றம் பலமுறை தெளிவாக உத்தரவிட் டுள்ளது.
சமீபத்தில் கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கூட, ‘‘உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாத நீதிபதி களிடம் இருந்து பணிகள் திரும்பப் பெறப்படும். அவர் களுடைய திறனை மேம்படுத்த நீதித்துறை அகாடமிக்கு அனுப்பி வைக்கப் படுவார்கள்’’ என்று தெளிவாக எச்சரிக்கப் பட்டிருந்தது.
அப்படி இருந்தும் பல வழக்குகளில் விசாரணை நீதிமன் றங்கள் பிணை வழங்க தயக்கம் காட்டுவது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும். எனவே, முன் பிணை மற்றும் பிணை வழங்க நீதிபதிகளிடம் உள்ள நீதித்துறை பணிகளை திரும்பப் பெற்று அவர்களை அகாடமி அனுப்பி திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகள் இந்த நாட்டின் சட்டம். அதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஆனால், உத்தர பிர தேசத்தில் நிலைமை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. எனவே, சம்பந்தப் பட்ட நீதிபதி களை நீதித்துறை அகாடமிக்கு அனுப்பி அவர் களுடைய திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜனநாயகத்தில் தேவைப்படாத சூழ்நிலைகளில் கைது செய்வ தற்கும், காவலில் வைப்பதற்கும் இடமில்லை. மக்களின் சுதந் திரத்தை பாதுகாக்க வேண்டும். மேலும், அரசுத் தரப்பு வழக்குரை ஞர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். அப்போதுதான், பிணை வழங்க தேவையில்லாமல் அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். அப்போதுதான் அரசுகள் மற்றும் சிபிஅய் உட்பட விசா ரணை அமைப்புகளைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் சரியான நிலைப் பாட்டை எடுக்க முடியும்.
-இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment